September 6, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் கொள்கை வழியில் தேசிய உணர்வையும், தெய்வீக நெறியையும் உயர்த்திப் பிடித்து, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காகப் பெரும் தொண்டாற்றியவரும், அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவரும், போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றிவாகை சூடி, சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றிய கல்வி வள்ளல் திரு. மூக்கையாத் தேவர் அவர்களின் நினைவு தினம் இன்று. பொதுவாழ்வில் நேர்மை, மக்களிடம் எளிமை என விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைத் துயரங்களையும், அவர்களின் உரிமைகளையும் பெற்றுத்தர அர்ப்பணிப்பு உணர்வுடன் அயராது பாடுபட்ட திரு. மூக்கையாத் தேவர் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் பணிகளை எந்நாளும் நினைவில் வைத்து போற்றுவோம்.
September 4, 2026 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்திய குடியரசின் முன்னாள் தலைவரும், தலைசிறந்த கல்வியாளருமான டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடி மகிழும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்கால இந்தியாவின் தூண்களான மாணவச் செல்வங்களுக்கு தரமான கல்வியை வழங்குவதோடு, நேர்மை, பொறுப்பு, ஒழுக்கம், விடாமுயற்சி, மனிதநேயம் போன்ற சிறந்த பண்புகளையும், சமூகச் சிந்தனைகளையும் கற்பிப்பதில் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது. மாணவச் செல்வங்களிடையே அறிவை விதைத்து, ஒழுக்கத்தை வளர்த்து, வெற்றியை அறுவடை செய்யும் வகையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் ஆசிரியப் பெருமக்கள் அனைவரின் கல்விப் பணி மென்மேலும் சிறந்தோங்கிட வேண்டும் எனக் கூறி, ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
September 4, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து GSLV F-17 ராக்கெட்டின் மூலம் EOS-05 எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தேவையான முக்கியத் தரவுகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்திருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் வெற்றிப் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.
September 1, 2026 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 தலைமைக் கழக அறிவிப்பு: கல்வி வள்ளல் திரு. மூக்கையாத் தேவர் அவர்களின் நினைவு தினம் – உசிலம்பட்டியில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில், கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்கள் மரியாதை செலுத்துகிறார். நாள் : 06.09.2026, நேரம்: காலை 10 மணி.