March 4, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், கந்தர்வக்கோட்டை கிழக்கு ஒன்றிய துவார் ஊராட்சிக் கழக செயலாளர் திரு.C.மைனர் அவர்களின் சகோதரர் திரு.C.மதியழகன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
March 4, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தாழக் கிடப்போரைத் தற்காப்பதே தர்மம் என்ற கொள்கை உணர்வோடு சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இறுதிவரை போராடி தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த அய்யா வைகுண்டர் அவர்களின் அவதார தினம் இன்று. பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் சம உரிமைகள் கொண்டவர்கள் என முழங்கி, விளிம்பு நிலை மக்களுக்கும் சமூகநீதியை பெற்றுத்தந்த பெருமைக்குரிய மகான் அய்யா வைகுண்டர் அவர்கள் அவதரித்த இந்நாளில், அவர் வகுத்துக் கொடுத்த பாதையில் தொடர்ந்து பயணித்திட நாம் அனைவரும் உறுதியேற்போம்.
March 2, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை தொடங்கும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உயர்கல்விக்கு அடித்தளமாக அமையும் இத்தேர்வை எந்தவித பதற்றமுமின்றி, நம்பிக்கையுடன் எதிர்கொண்டு வெற்றி பெற்று, அவரவர் விரும்பிய எதிர்காலத்தை நோக்கிய பயணத்தை தொடர மாணவ, மாணவியர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.
March 2, 2025 In ticker‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இன்று முதல் ரம்ஜான் நோன்பை தொடங்கியிருக்கும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புனித மாதத்தில் உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி அனைவரிடத்திலும் அன்பு பாராட்டி, ஏழை எளிய மக்களுக்கு உணவளித்து மகிழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரின் வாழ்வில் மகிழ்ச்சியும் நல்ல ஆரோக்கியமும் பெருகிட எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
March 2, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசைக் கண்டித்து மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினத்தன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருநெல்வேலியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
March 1, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: திருச்சி தெற்கு மாவட்டம், உறையூர் பகுதி 11வது வட்டக் கழக துணைச்செயலாளர் திரு.K.சத்தியராஜ் அவர்களின் தந்தை திரு.A.குழந்தைவேல் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.