February 13, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தேனி தெற்கு மாவட்டம், கம்பம் சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த ஒன்றிய, நகர, பேரூராட்சிக்குட்பட்ட செயல்வீரர்கள்-செயல்வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம் தேனி மாவட்டம், சின்னமனூரில் நடைபெற்றது. கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கழக பொதுச்செயலாளர் அவர்கள் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்கள்.
February 13, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: தென்காசி வடக்கு மாவட்டம், வாசுதேவநல்லூர் பேரூர் கழக செயலாளர் திரு.அம்மாதாசன் (எ) கருப்பசாமி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
February 13, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலேயே தங்கு தடையின்றி போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் – மாணவ, மாணவியர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் போதைப் பொருட்களுக்கு அடியோடு முடிவு மறுக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனங்கள். தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படும் புகையிலை, போதை சாக்லெட் உள்ளிட்ட போதைப் பொருட்களால் ஏராளமான மாணவ, மாணவியர்கள் போதைக்கு அடிமையாகி தங்களின் எதிர்காலத்தை தொலைத்து வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. போதைப் பொருட்கள் எந்த வடிவில் வந்தாலும் அதனை அடியோடு ஒழிக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறிய திமுக அரசால், ஏற்கனவே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையை கூட தடுக்க முடியவில்லை என்பது அரசு நிர்வாகத்தின் கையாலாகாத்தனத்தையே வெளிப்படுத்துகிறது. தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு சில்லறை விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் உணவுப் பாதுகாப்புத்துறையும், காவல்துறையும், அத்துடன் அதனை கடந்து விடுவதும் மொத்த விற்பனையாளர்களை கண்டுகொள்ளாமல் விடுவதுமே கல்வி நிறுவனங்களுக்கு அருகே புகையிலைப் பொருட்கள் சர்வசாதாரணமாக விற்பனை செய்யப்படுவதற்கு முக்கிய காரணம் என புகார் எழுந்துள்ளது. பள்ளிக்குழந்தைகள் தன்னை அப்பா… அப்பா… என அழைக்கும் போது அளவில்லா மகிழ்ச்சி அடைவதாக பெருமிதமடையும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அக்குழந்தைகள் பயிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே தங்குதடையின்றி நடைபெறும் போதைப் பொருட்களின் விற்பனையை தடுக்க அப்பாவாக என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார் ? என மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, மாணவ சமுதாயத்தை சீரழித்து வரும் போதைப் பொருட்களின் தாராளப் புழக்கத்தை அடியோடு ஒழிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை இனியாவது தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சரையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறேன்.
February 12, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: தஞ்சாவூர் மாநகர் மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் திரு.C.சுரேஷ் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
February 11, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கோயம்புத்தூர் கிழக்கு மாவட்டம்: மாவட்டக் கழக நிர்வாகிகள், சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்.
February 11, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கோயம்புத்தூர் கிழக்கு மாவட்டம் : சுந்தராபுரம் கிழக்கு, சுந்தராபுரம் மேற்கு மற்றும் குறிச்சி ஆகிய பகுதி கழகங்கள் “சுந்தராபுரம்”, “ஈச்சனாரி”, “போத்தனூர்” மற்றும் “குறிச்சி” என மறுசீரமைப்பு.
February 11, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கோயம்புத்தூர் கிழக்கு மாவட்டம்: மதுக்கரை மற்றும் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றியங்கள், மதுக்கரை கிழக்கு, மதுக்கரை மேற்கு மற்றும் கிணத்துக்கடவு மேற்கு என மறுசீரமைப்பு.
February 11, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கோயம்புத்தூர் கிழக்கு மாவட்டம் : சூலூர் வடக்கு மற்றும் சூலூர் தெற்கு ஆகிய இரண்டு ஒன்றியங்கள், சூலூர் ஒன்றியம் என ஒன்றிணைப்பு.
February 11, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தேனி தெற்கு மாவட்டம் : கம்பம் நகரக் கழக நிர்வாகிகள், கம்பம் நகர வார்டு கழக செயலாளர்கள், கம்பம் நகர சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
February 11, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தேனி தெற்கு மாவட்டம் : “கம்பம் கிழக்கு” மற்றும் “கம்பம் மேற்கு” ஆகிய இரண்டு நகரங்கள், “கம்பம் நகரம்” என ஒன்றிணைப்பு.