December 3, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ”சாதிப்பதற்கு மாற்றுத்திறன் தடையல்ல” என்ற தன்னம்பிக்கை வரிகளுக்கு ஏற்ப, தடைகளை தகர்த்தெறிந்து ஒவ்வொரு துறைகளையும் தனக்கான துறைகளாக மாற்றிக் கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உரிமைகளை பேசும் தினமாக நின்றுவிடாமல், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என அனைத்திலும் சம வாய்ப்பு வழங்கி, ஒவ்வொரு மாற்றுத்திறனாளியும் சமுதாயத்தில் சுயமரியாதையுடன் வாழ எளிதில் அணுகக்கூடிய சமமான உலகத்தை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம்.
December 2, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான கழகப் பணிகளை விரைந்து செயலாற்றிட சட்டமன்றத்தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் (இரண்டாம் கட்டப் பட்டியல்)
December 2, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் : மாவட்டக் கழக பொருளாளர், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்
December 2, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் : கலசப்பாக்கம் கிழக்கு மற்றும் கலசப்பாக்கம் மேற்கு ஆகிய ஒன்றிய கழகங்கள், “கலசப்பாக்கம் கிழக்கு ஒன்றியம்”, “கலசப்பாக்கம் மேற்கு ஒன்றியம்” மற்றும் “கலசப்பாக்கம் வடக்கு ஒன்றியம்” என மூன்று ஒன்றியக் கழகங்களாகப் பிரிப்பு
December 2, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 விழுப்புரம் தெற்கு மாவட்டம் : மரக்காணம் கிழக்கு மற்றும் மரக்காணம் மேற்கு ஆகிய ஒன்றியக் கழகங்கள், “மரக்காணம் கிழக்கு ஒன்றியம்”, “மரக்காணம் மத்திய ஒன்றியம்” மற்றும் “மரக்காணம் மேற்கு ஒன்றியம்” என மூன்று ஒன்றியக் கழகங்களாக பிரிப்பு
December 2, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 திண்டுக்கல் மேற்கு மாவட்டம் : மாவட்டகழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், திண்டுக்கல் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் நியமனம்
December 2, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் : மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்
December 2, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 செஸ் போட்டியின் உயரிய பட்டமான கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்ற தமிழ்நாட்டின் முதல் செஸ் வீராங்கனை என்ற சாதனையை படைத்திருக்கும் வைஷாலி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடுமையான உழைப்பு மற்றும் விடா முயற்சியின் மூலம் இந்தியாவின் 84 வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றிருக்கும் வைஷாலி அவர்கள், அடுத்தடுத்து நடைபெறும் உலகளவிலான போட்டிகளில் பதக்கங்களை குவித்து தாய்நாட்டிற்கு மென்மேலும் பெருமை சேர்க்கவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
November 30, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சென்னையில் பெய்துவரும் தொடர் மழையால் குடியிருப்புகளை சூழ்ந்திருக்கும் மழை நீரை போர்க்கால அடிப்படையில் அகற்றுவதோடு, பொதுமக்களை பாதுகாக்க நிரந்தர வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடைவிடாமல் பெய்துவரும் கனமழை காரணமாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் மழைநீர் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க எவ்வித நடவடிக்கைகளையும் திமுக அரசு மேற்கொள்ளவில்லை என்பதற்கு முதலமைச்சர் அவர்களின் தொகுதியான கொளத்தூரில் குளம்போல தேங்கியிருக்கும் மழைநீரே சிறந்த உதாரணம் . சாலைகள் மற்றும் குடியிருப்புகளை சூழந்திருக்கும் மழைநீரால் சுகாதார சீர்கேடு நிலவுவதோடு, மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாமல் இருப்பதன் மூலம் விபத்து ஏற்படும் அபாயமும் இருப்பதாக சென்னையைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தேங்கியிருக்கும் மழைநீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதோடு, மழைநீர் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
November 29, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து இல்லம் திரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.