December 30, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நாடெங்கும் உரம், ஊட்டச்சத்து, மருந்து என பயிரோடு சேர்த்து மண்ணையும் மலடாக்கிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் உழவர் பெருமக்களை சந்தித்து இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவு தினம் இன்று.நமது பாரம்பரிய உழவுமுறையான பயிர்சுழற்சி உழவு மூலம் இயல்பாகவே மண்ணில் நைட்ரஜன் சத்து அதிகரிப்பதை நிரூபித்து காட்டிய ஐயா நம்மாழ்வாரின் வழியில் நாம் அனைவரும் இயற்கை விவசாயத்தை நோக்கிய பாதையில் பயணிக்க இந்நாளில் உறுதியேற்போம்.
December 28, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் : திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மத்தியம், செங்கல்பட்டு தெற்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் கிழக்கு, விழுப்புரம் தெற்கு, கள்ளக்குறிச்சி வடக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு, ஈரோடு மாநகர் கிழக்கு மற்றும் தருமபுரி மாவட்டம்.
December 28, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்டம் : மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் மற்றும் மாவட்ட சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு செயலாளர் நியமனம்.
December 28, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்டம் : BP அக்ரஹாரம் கிழக்கு-மேற்கு, கருங்கல்பாளையம், மரப்பாலம் பகுதி கழகங்கள் மறுசீரமைப்பு
December 28, 2023 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: சட்டமன்றத்தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கள்-வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டங்களின் தொடர்ச்சி ஜனவரி 3ஆம் தேதி முதல் நடைபெறுகிறது! – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்கிறார்!
December 28, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கிருஷ்ணகிரி மத்திய மாவட்டம் : மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்
December 28, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தேனி வடக்கு மாவட்டம் : மாவட்டக் கழக துணைச்செயலாளர், ஆண்டிப்பட்டி தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் மற்றும் மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்
December 28, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தேனி வடக்கு மாவட்டம் : தேனி மற்றும் பெரியக்குளம் நகரம் பிரிப்பு
December 28, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திரையுலகம்மட்டுமல்லாது தமிழக அரசியல் வரலாற்றிலும் தனக்கென தனி அடையாளத்தை பதித்த தேமுதிகதலைவர் கேப்டன்திரு.விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையைஏற்படுத்துகிறது. சாமானியனாகசினிமாவுக்குள் நுழைந்து தன் புரட்சிகரமான கருத்துக்கள் மூலம் உச்ச நட்சத்திரமாகதிகழ்ந்ததோடு, தமிழக அரசியலிலும் தவிர்க்க முடியாதசக்தியாக திகழ்ந்த திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கேமிகப்பெரிய இழப்பு ஆகும். இயன்றதைசெய்வோம் இல்லாதவருக்கே எனும் முழக்கத்தை முன்னிறுத்தி நடிகராக, நடிகர் சங்கத்தலைவராக, அரசியல்வாதியாக, சட்டமன்றஎதிர்க்கட்சித் தலைவராக,ஏழை, எளிய மக்களுக்கு உதவும் மனிதாபிமானம்கொண்டவராக கேப்டன் அவர்கள் ஆற்றிய பணிகள் என்றென்றும் தமிழக மக்கள் மனதில்நிலைத்திருக்கும். தமிழ் மீதும்தமிழக மக்கள் மீதும் அதீத பற்று கொண்டிருந்த கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களைஇழந்துவாடும் குடும்பத்தினர், திரையுலகத்தினர், ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள்அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
December 27, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சென்னை தண்டையார்பேட்டையில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு பாய்லர் வெடித்த விபத்தில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர் திரு.பெருமாள் அவர்கள் உயிரிழந்திருப்பதாக வரும் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. பெருமாள் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதே விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மற்ற ஊழியர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்குவதோடு, இது போன்ற ஆபத்து நிறைந்த பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.