December 25, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவா ? – மாணவிகள் பாதுகாப்பான சூழலில் கல்வி பயில வேண்டிய சூழலை உருவாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவர் அடையாளம் தெரியாத சிலரால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றிருக்கும் இந்த விரும்பத்தகாத சம்பவம் அப்பல்கலைக்கழகத்தில் பயிலும் ஒட்டுமொத்த மாணவிகளின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. மாநிலத்தின் தலைநகரில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவிக்கு நடைபெற்றிருக்கும் இந்த சம்பவம், தமிழகத்தில் அனைத்து இடங்களிலுமே பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதையே மீண்டும் மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. எனவே, பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவியை பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் மாணவிகள் அனைவரும் பாதுகாப்பான சூழலில் கல்வி பயில்வதை உறுதி செய்ய வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
December 25, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்து இந்திய தேச விடுதலைக்காக போராடி நாட்டையும் மக்களையும் பாதுகாத்த வீர மங்கை வேலுநாச்சியார் அவர்களின் நினைவுதினம் இன்று. சுதந்திர போராட்ட வரலாற்றில் இழந்த நாட்டை மீண்டும் போராடி மீட்ட தீரமிக்க ஒரே பெண் அரசியான வேலுநாச்சியார் அவர்களின் வீரத்தையும் துணிச்சலையும் இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.
December 24, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் ஒட்டுமொத்த குணநலன்களையும் குவியப் பெற்ற பொன்மனச் செம்மல், நல்லாட்சியை வழங்குவதில் நாட்டிற்கே வழிகாட்டியாக திகழ்ந்த மாபெரும் தலைவர், தமிழக மக்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவுதினம் இன்று. கோடிக்கணக்கான மக்களில் ஒருவராக, ஏழைப் பங்காளராக, எளியோரின் நண்பராக, உழைக்கும் வர்க்கத்தின் உற்றத் தோழனாக அடித்தட்டு மக்களின் பேரன்பையும் பேராதரவையும் பெற்ற புரட்சித் தலைவர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் அவர்களின் வழியில் தொடர்ந்து பயணிக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்.
December 24, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அன்பான வார்த்தைகளாலும், அன்பான வாழ்க்கையாலும்,உலகை ஆட்கொண்ட அருள்நாதர் இயேசுபிரான் அவதரித்த நாளை கிறிஸ்துமஸ் பெருவிழாவாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது மனமார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
December 24, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தீண்டாமையை ஒழிப்பதிலும், பெண்ணடிமையை அகற்றுவதிலும், சமூக கொடுமைகளை எதிர்த்துப் போராடுவதிலும், தமிழ் மொழியை பாதுகாப்பதிலும் முன்னோடிகளுக்கெல்லாம் முன்னோடியாக திகழ்ந்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவுதினம் இன்று. ஒப்பற்ற தலைவராக, தலைசிறந்த சிந்தனையாளராக, தத்துவ மேதையாக, சமூக சீர்திருத்தவாதியாக, சமுதாய புரட்சியாளராக என தமிழகத்திற்கு பெரியார் ஆற்றிய தொண்டுகளையும், அவரால் தமிழகம் பெற்றிருக்கும் வளர்ச்சியையும் எந்நாளும் நினைவில் கொள்வோம்.
December 23, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள் 0 மக்களைப் பற்றியே சிந்தித்து மக்களுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த சுதந்திரப் போராட்ட வீரரும், இந்தியாவின் தலைசிறந்த அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான திரு.கக்கன் அவர்களின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மதுரை மாவட்டம், மேலூர் தும்பைப்பட்டியில் அமைந்துள்ள தியாகச்சீலர் திரு.கக்கன் அவர்களின் மணிமண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
December 23, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மக்களைப் பற்றியே சிந்தித்து மக்களுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த சுதந்திரப் போராட்ட வீரரும், இந்தியாவின் தலைசிறந்த அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான திரு. கக்கன் அவர்களின் நினைவு தினம் இன்று. பொதுவாழ்க்கையில் நேர்மையாகவும், எளிமையாகவும் இருக்க வேண்டும் என்பதையே இறுதிவரை கொள்கையாகவே கொண்டிருந்த திரு. கக்கன் அவர்கள் நாட்டுக்காக ஆற்றிய பணிகளை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
December 23, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 “உழவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது” என்ற வரிகளுக்கு ஏற்ப வரவு – செலவு பார்க்காமல் உழுவதையும், உழைப்பதையுமே தன் வாழ்நாள் பணியாக கொண்டிருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் எனது தேசிய விவசாயிகள் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மழை, புயல், வெள்ளம், வறட்சி என எத்துனை பேரிடர்களை சந்தித்தாலும் தங்களின் கடின உழைப்பின் மூலம் உலகிற்கே உணவளிக்கும் மகத்தான சேவையில் இடைவிடாது ஈடுபட்டுவரும் விவசாயப் பெருமக்கள் அனைவரையும் இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.
December 22, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்டம்: திண்டுக்கல் மாவட்டம் மறுசீரமைப்பு; மாவட்டக் கழக செயலாளர்கள் நியமனம்.
December 21, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி.தினகரன் அவர்கள் திருவண்ணாமலையில் இன்று, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், மருத்துவர் அய்யா திரு.ராமதாஸ் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் !