November 1, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 1956 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதன் அடிப்படையில் தமிழ் மொழி பேசும் மக்களை பெரும்பான்மையாக கொண்டிருந்த தமிழ்நாடு உருவான தினம் இன்று… தமிழக மக்கள் ஒவ்வொருவரும் கொண்டாடி மகிழ வேண்டிய தமிழ்நாடு உருவான இந்நாளில், மக்கள் நலனையும், மாநிலத்தின் உரிமைகளையும் எந்தவித சமரசமுமின்றி நிலைநாட்ட நாம் அனைவரும் உறுதியேற்போம்!
October 31, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா நிகழ்வில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பரமக்குடி காவல் உதவி ஆய்வாளர் திரு.சரவணன் அவர்கள், கொடிக்கம்பத்தில் ஏற்பட்ட மின்விபத்தில் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது. காவல் உதவி ஆய்வாளர் திரு.சரவணன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
October 30, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை – கழக நிர்வாகிகள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்கள்.
October 30, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்திய நாட்டின் விடுதலைக்காக போராடியவரும், தேசியத்தை தனது உடலாகவும், தெய்வீகத்தை தன் உயிராகவும் போற்றிய மாபெரும் தலைவர் தென்னகத்து நேதாஜி பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை இன்று… உண்மை, உழைப்பு, தன்னலமற்ற மக்கள் பணிக்கு அடையாளமாக திகழ்ந்து தன் வாழ்நாள் முழுவதையும் மக்களுக்காகவே அர்ப்பணித்த பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்குவோம்.
October 30, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கால்பந்து செயற்கை புல் விளையாட்டுத்திடல்களை தனியார் வசம் ஒப்படைக்கும் சென்னை மாநகராட்சியின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது – விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தீர்மானத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 9 கால்பந்து செயற்கை புல் விளையாட்டுத் திடல்கள் மற்றும் 595 பூங்காக்களை தனியார் வசம் குத்தகைக்கு விடுவதற்கான தீர்மானங்கள் மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விளையாட்டுத் திடல்களை தனியார் வசம் ஒப்படைப்பதோடு, அதனை பயன்படுத்த ஒரு மணி நேரத்திற்கு ரூ.120 கட்டணமாக நிர்ணயித்திருப்பது ஏழை எளிய வீரர், வீராங்கனைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு அவர்களின் விளையாட்டு எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்திருக்கிறது. மேலும், வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஷெனாய்நகர் அம்மா அரங்கம் மற்றும் தி.நகர் சர். பிட்டி தியாகராயர் அரங்கத்தை தனியாருக்கு தாரை வார்த்திருப்பதோடு அதற்கான வாடகையையும் உயர்த்தியிருக்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் மக்கள் விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. எனவே, விளையாட்டுத்திடல்கள், பூங்காக்கள் மற்றும் அரங்குகளை தனியாருக்கு தாரைவார்க்கும் வகையில் மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மக்கள் விரோத தீர்மானங்களை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, வருவாயைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்துகிறேன்.
October 30, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்! தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களை தன் கொடுஞ்செயல்களால் பெரும் துன்பத்திற்குள்ளாக்கிய நரகாசுரன் எனும் ஈவு இரக்கமற்ற அரக்கனை திருமால் அழித்த தினமாக கொண்டாடப்படும் இந்த தீபாவளித் திருநாள், அனைவரது வாழ்விலும் இருள் விலகி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் நாளாகவும் அமையட்டும். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும் என்ற நீதியை உணர்த்தும் இந்த தீபாவளித் திருநாளில் மக்களை சூழ்ந்திருக்கும் தீயசக்திகள் விலகி அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகட்டும் எனக்கூறி மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
October 29, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சென்னையில் 27 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் – தமிழகத்தை போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை மையமாக மாற்றியிருக்கும் திமுக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. சென்னை மூலக்கடை பேருந்து நிலையம் அருகே 27 கோடி ரூபாய் மதிப்பிலான 2.7 கிலோ மெத்தபெட்டமைன் எனும் கொடியவகை போதைப் பொருளை பறிமுதல் செய்த மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இருவரை கைது செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுகளில் நாளுக்கு நாள் பெருகிவரும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டம் குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் அதனை கட்டுப்படுத்தாமல் தமிழகத்தை போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை மையமாக மாற்றியிருக்கும் திமுக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. கொடியவகை போதைப் பொருட்கள் தமிழகத்திற்குள் நுழைவதை தடுக்கவோ, பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் அவற்றை அடியோடு ஒழிக்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, ஆண்டுதோறும் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழியை மட்டும் ஏற்பது எந்தவகையிலும் பயனளிக்காது. எனவே, கும்பகர்ண தூக்கத்தில் இருந்து இனியாவது கண்விழித்து இளைய தலைமுறையின் எதிர்காலத்தை சீர்குலைக்கும் போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை அடியோடு தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
October 29, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் மருத்துவமனைகளில் நர்சிங் படிக்காதவர்களை செவிலியர்களாக நியமிக்கத் திட்டமா? பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் உடல்நலத்தோடு விளையாடும் சென்னை மாநகராட்சியின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது. நர்சிங் படிப்பு படிக்காதவர்களை பணிமூப்பு அடிப்படையில் சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கிவரும் அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களாக நியமிக்க முடிவு செய்து அது தொடர்பாக வட்டார துணை ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் செவிலியர்கள் நியமனத்திற்கான தகுதிகளை எந்தவித முன்னறிவிப்புமின்றி மாற்றியதோடு, நர்சிங் படிக்காதவர்களை பணிமூப்பு அடிப்படையில் மட்டுமே செவிலியர்களாக நியமிக்க முயற்சிக்கும் சென்னை மாநகராட்சியின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. ஊட்டச்சத்து ஆலோசனை வழங்குவதற்கும், தடுப்பூசி போடுவதற்கும் பயிற்சி வழங்கப்பட்டிருப்பவர்களை செவிலியர்களாக நியமித்தால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையில் குறைபாடுகள் ஏற்படுவதோடு நோயாளிகளும் மிகுந்த பாதிப்புக்குள்ளாவர்கள் என எம்.ஆர்.பி செவிலியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. எனவே, போதுமான கல்வித் தகுதி இல்லாதவர்களை பணிமூப்பு அடிப்படையில் செவிலியர்களாக நியமிக்கும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, தேர்வாணையத்தின் மூலம் முறைப்படி தேர்வு செய்யப்பட்டவர்களையே செவிலியர்களாக நியமிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்துகிறேன்.
October 28, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம் கழகத்தினர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள எனது அன்பு வேண்டுகோள்!
October 27, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக செய்தி வெளியீடு: மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் குருபூஜை விழா; கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.