பிரபல அணு விஞ்ஞானியும், இந்தியா நடத்திய அணு ஆயுத சோதனைகளில் மிக முக்கிய பங்கு வகித்தவருமான விஞ்ஞானி திரு.ராஜகோபால சிதம்பரம் அவர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இந்தியாவின் அணு ஆயுதத் திறனை மேம்படுத்தியதில் மகத்தான பங்களிப்பை வழங்கிய விஞ்ஞானி திரு.ராஜகோபால சிதம்பரம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், சக விஞ்ஞானிகளுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு – தொடர் கதையாகிவரும் விபத்துகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பது எப்போது? விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பொம்மையாபுரம் என்ற கிராமத்தில் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கின்றன. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு பசுமையான சூழலை பராமரிக்கவும், பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும் அறிவுறுத்திய இரண்டு மாதத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த விபத்து மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப்போக்கையே வெளிப்படுத்துகிறது. விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் அடிக்கடி நிகழும் விபத்துகள் குறித்தும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்தும் பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால் அப்பாவி தொழிலாளர்கள் உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. எனவே, இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படா வண்ணம் பட்டாசு ஆலைகளில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.