September 21, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கிருஷ்ணகிரி மத்திய மாவட்டம் : மாவட்ட இளம்பெண்கள் பாசறை செயலாளர் மற்றும் கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் நியமனம்.
September 21, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 சேலம் கிழக்கு மாவட்டம் : ஆத்தூர் சட்டமன்றத்தொகுதி பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மன்றம், மாவட்ட இளைஞர் பாசறை மற்றும் மாவட்ட இலக்கிய அணி செயலாளர்கள் நியமனம்.
September 21, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 சேலம் மத்திய மாவட்டம் : சேலம் வடக்கு சட்டமன்றத்தொகுதி பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மன்றம், மாவட்ட மருத்துவர் அணி மற்றும் மாவட்ட மீனவர் அணி செயலாளர்கள் நியமனம்.
September 21, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 சேலம் வடக்கு மாவட்டம் : கருப்பூர் பேரூர் கழக செயலாளர் நியமனம்
September 21, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கோவை மாநகர் மாவட்டம்: ஒண்டிப்புதூர் மற்றும் இரத்தினகிரி பகுதிக் கழக செயலாளர், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்.
September 21, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 திருச்சி மாநகர் மாவட்டம்: தில்லை நகர் பகுதிக் கழக செயலாளர், அந்தநல்லூர் வடக்கு ஒன்றியக் கழக செயலாளர், சிறுகமணி பேரூர் கழக செயலாளர், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், உறையூர் பகுதிக் கழக மாவட்ட பிரதிநிதி மற்றும் 23வது வட்டக் கழக செயலாளர் நியமனம்.
September 21, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 புதுக்கோட்டை தெற்கு மாவட்டம்: மாவட்டக் கழக அவைத்தலைவர், ஆவுடையார் கோவில் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் நியமனம்.
September 21, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தேனி தெற்கு மாவட்டம்: தேவாரம் மற்றும் பூதிப்புரம் பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்.
September 20, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழக மக்களுக்கும் மண்ணுக்கும் எதிரான திட்டங்களை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது – கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கங்களை அமைக்கும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். கன்னியாகுமரி மாவட்டம் மிடாலம், கீழ்மிடாலம், புத்தன்துறை, ஏழுதேசம் உள்ளிட்ட பகுதிகளில் அணுக்கனிம சுரங்கங்களை அமைக்க மத்திய அரசின் ஐ.ஆர்.இ.எல் (Indian Rare Earths Limited) நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகவும், அது தொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது. கிள்ளியூர் தாலுக்காவிற்குட்பட்ட பகுதிகளில் 1144 ஹெக்டேர் பரப்பளவில் அமையவிருக்கும் இந்த அணுக் கனிம சுரங்கங்களின் மூலம், இயற்கையாகவே அதிக கதிரியக்க தன்மை கொண்ட கிராமங்கள் அதிகளவிலான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்பதால் இத்திட்டத்திற்கு அப்பகுதி மீனவ சமுதாய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இனயம், புத்தன்துறை, மிடாலம், மனவாளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் ஏற்கனவே கடலரிப்பு தீவிரமாக இருக்கும் நிலையில், அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் திட்டம் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில் கடற்கரையோடு, கடல்பகுதியின் வளமும் பெருமளவு பாதிக்கப்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இத்திட்டத்திற்கு எதிரான குரலை எழுப்பியுள்ளனர். எனவே, அணுக் கனிம சுரங்கங்கள் அமைப்பது தொடர்பாக அக்டோபர் ஒன்றாம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் கருத்துக் கேட்புக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும் மக்களுக்கும், மண்ணுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இத்திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
September 19, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திருச்சி துறையூர் அருகே தனியார் உணவகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட அரசு முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் – விரிவான விசாரணையின் மூலம் முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் அனைவரின் மீதும் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே செயல்பட்டு வந்த தனியார் உணவகம் ஒன்றில் மதிய உணவுத் திட்டத்திற்காக வழங்கப்படும் அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அங்கன்வாடி மையங்கள், அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டைகள் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படும் அளவிற்கான சூழலை உருவாக்கிய பள்ளிக்கல்வித்துறையின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. துறையூர் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் இருந்து முட்டை, பாமாயில், அரிசி உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களும் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுவது வாடிக்கையாகி வருவதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, அரசுப் பள்ளி குழந்தைகளுக்காக வழங்கப்பட்ட முட்டைகள் வெளிச்சந்தையில் விற்பனைக்கு வந்தது எப்படி? என்பது குறித்து திருச்சி மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் உரிய ஆய்வை மேற்கொண்டு, இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற்றிருக்கும் பட்சத்தில், தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.