September 24, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தமிழகத்தில் பாமர மக்களுக்கும் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவரும், பத்திரிகை உலகின் ஜாம்பவனாக வலம் வந்தவருமான பத்மஸ்ரீ பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாளையொட்டி கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள திரு.பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த திருவுருவ படத்திற்கு கழக துணைப் பொதுச்செயலாளரும், தென்சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு.G.செந்தமிழன், கழக அமைப்பு செயலாளரும், கழக பொறியாளர் அணி செயலாளரும், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட கழக செயலாளருமான திரு.ம.கரிகாலன், மத்திய சென்னை மேற்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.V.சுகுமார் பாபு, மத்திய சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.L.ராஜேந்திரன், வடசென்னை கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.C.P.ராமஜெயம், வடசென்னை மேற்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.பி.ஆனந்தன், மத்திய சென்னை மத்திய மாவட்டக் கழக செயலாளர் திரு.ஹாஜி K.முகமது சித்திக், ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
September 24, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக விருதுநகர் மேற்கு மாவட்டக் கழக பொறுப்பாளராக திரு.பயில்வான் K.S.சந்தோஷ்குமார் அவர்கள் நியமனம்.
September 24, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழகத்தில் பாமர மக்களுக்கும் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவரும், பத்திரிகை உலகின் ஜாம்பவனாக வலம் வந்தவருமான பத்மஸ்ரீ டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனர் அவர்களின் பிறந்த தினம் இன்று. பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில், கோயில் திருப்பணி என பல்வேறு துறைகளில் சாதனையாளராக திகழ்ந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் தமிழுக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் ஆற்றிய பணிகளை எந்நாளும் போற்றி வணங்குவோம்.
September 23, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் – கோரிக்கைகளை நிறைவேற்றவோ, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தும் திமுக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. அரசுத்துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோரை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், பதவி உயர்வில் 4 சதவிகித இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும், சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வை நடத்த வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துவகை மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் குடும்பத்துடன் சென்னை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் நடத்தும் ஒவ்வொரு போராட்டத்தின் போதும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து வாக்குறுதியளிக்கும் திமுக அரசு, அதனை நிறைவேற்றவோ, நடைமுறைப்படுத்தவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காததே, மாற்றுத்திறனாளிகளை காலைவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் அளவிற்கான சூழலுக்கு தள்ளியுள்ளது. சென்னை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் இன்று காலை முதல் குடும்பத்தினருடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாற்றுத்திறனாளிகளை பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்காமல் காலம் தாழ்த்தும் அத்துறை அதிகாரிகளின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. எனவே, குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதோடு, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
September 23, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும், ஈசிஐ திருச்சபையின் பேராயருமான திரு.எஸ்றா சற்குணம் அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது. திரு.எஸ்றா சற்குணம் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் இந்திய சமூகநீதி இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
September 23, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தளராத தன்னம்பிக்கை, இடைவிடாத பயிற்சி மற்றும் கடின முயற்சியால் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை பதிவு செய்திருக்கும் இந்திய அணியின் வீரர், வீராங்கனைகளின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர்ந்து விளையாட்டு உலகில் புதிய உச்சத்தை தொட வாழ்த்தி மகிழ்கிறேன்.
September 21, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 37 பேர் கைது – இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்திற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதே ஒரே தீர்வு. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 37 மீனவர்களை கைது செய்திருக்கும் இலங்கை கடற்படை, மூன்று மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. கடந்த 50 நாட்களில் மட்டும் ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுகோட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான தமிழக மீனவர்களை கைது செய்திருக்கும் இலங்கை கடற்படை, இன்று மேலும் 37 பேரை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தங்களின் வாழ்வாதாரத்திற்காக கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, கைது செய்து சிறையில் அடைப்பது, படகுகளை பறிமுதல் செய்வது, அபராதம் விதிப்பது என இலங்கை கடற்படையின் தொடர் அராஜகப் போக்கு, தமிழக மீனவர்கள் கடலுக்குள் செல்லவே அச்சப்படும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது. எனவே, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கிலும், மீன்பிடித் தொழிலில் சுதந்திரமாக ஈடுபடும் வகையிலும் இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
September 21, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கடலூர் கிழக்கு மாவட்டம்: மாவட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மற்றும் மாவட்ட சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு செயலாளர், குறிஞ்சிப்பாடி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் நியமனம்.
September 21, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கடலூர் வடக்கு மாவட்டம்: விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட விவசாயப் பிரிவு மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு செயலாளர்கள் நியமனம்.
September 21, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கிருஷ்ணகிரி மத்திய மாவட்டம் : மாவட்ட இளம்பெண்கள் பாசறை செயலாளர் மற்றும் கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் நியமனம்.