February 15, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மக்கள் நலக்கொள்கைகளை தமிழகத்தில் நிலைநாட்டிடுவோம்! எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்தி வெற்றிக்கொடி ஏற்றிட சபதமேற்போம்!
February 13, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 JEE முதன்மைத் தேர்வில் அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கும் பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யாமந்திர் மேல்நிலைப்பள்ளி மாணவர் முகுந்த் பிரதீஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இடைவிடா பயிற்சி மற்றும் தளராத முயற்சியின் காரணமாக 11 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற தேர்வில் 300க்கு 300 மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பெற்றிருக்கும் மாணவர் முகுந்த் அவர்களின் அடுத்த கட்ட கல்விப் பயணம் சாதனைப் பயணமாக தொடர எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
February 13, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியைச் சேர்ந்த திருமதி.ஸ்ரீபதி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கல்வி மட்டுமே ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றிருக்கும் திருமதி.ஸ்ரீபதி அவர்கள் அடுத்து வரும் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக திகழ வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
February 13, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 வேலூர் மாநகர் மாவட்டம் : சட்டமன்றத்தொகுதி கூடுதல் பொறுப்பாளர்கள் நியமனம்
February 13, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கடலூர் கிழக்கு மாவட்டம் : மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், பகுதிக் கழக நிர்வாகிகள், ஒன்றியக் கழக நிர்வாகிகள், ஊராட்சிக் கழக செயலாளர்கள் நியமனம்
February 13, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கடலூர் கிழக்கு மாவட்டம் : கடலூர் மாநகரக் கழகம் தற்போது மறுவரையறைக்கப்பட்டு, “மஞ்சகுப்பம் பகுதிக்கழகம்”, “புதுப்பாளையம் பகுதிக் கழகம்” மற்றும் “திருப்பாதிரிபுலியூர் பகுதிக் கழகம்” மற்றும் “கடலூர் துறைமுகம் பகுதிக் கழகம்” என மறுசீரமைப்பு
February 13, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கடலூர் கிழக்கு மாவட்டம் : கடலூர் வடக்கு, கடலூர் மேற்கு ஒன்றியக் கழகங்கள் சீரமைப்பு.
February 13, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கடலூர் வடக்கு மாவட்டம் : மாவட்டக் கழக பொருளாளர், திட்டக்குடி சட்டமன்றத்தொகுதி பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட இளம்பெண்கள் பாசறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலப்பிரிவு செயலாளர்கள் நியமனம்
February 12, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 “மக்களின் வளர்ச்சிக்கான கொள்கைகளோ, பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திட்டங்களோ இல்லாத வெற்று கட்டுக்கதையே திமுக அரசின் ஆளுநர் உரை”…
February 9, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்தியாவில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி விவசாய உற்பத்தியை பெருக்குவதில் முன்னோடியாக திகழ்ந்த விவசாயிகளின் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கு மத்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நாடு சுதந்திரமடைந்த பின்பு இந்தியாவில் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்த நிலை மாறி, வேளாண் உற்பத்திப் பொருட்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையை உருவாக்கிய பெருமை விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களையே சாரும். கிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண் ஆராய்ச்சிகளுக்காக ஏற்கனவே பத்ம ஸ்ரீ, பத்ம பூசன், பத்ம விபூசண் ஆகிய விருதுகளை பெற்றிருக்கும் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கு தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் பாரத ரத்னா விருது கூடுதல் பெருமை சேர்த்துள்ளது. மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணைப்பிரதமரும், சிறந்த நாடாளுமன்றவாதியுமான திரு.எல்.கே.அத்வானி, முன்னாள் பிரதமர்கள் சரண்சிங் மற்றும் நரசிம்மராவ் ஆகிய மூவருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது அவர்கள் ஆற்றிய பணிகளை என்றென்றும் நினைவில் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.