November 15, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சமுதாயத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் காட்டுநாயக்கர் சமுதாய மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பதா ? – விளிம்பு நிலை மக்களின் கல்விக்கும் வேலைவாய்ப்பிற்கும், முன்னேற்றத்திற்கும் தடைபோடும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் காட்டுநாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள், சாதி சான்றிதழ் வழங்கக் கோரி தங்கள் குழந்தைகளுடன் 8வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மதுரை மாவட்டத்தில் இயங்கிவரும் பல்வேறு பள்ளிகளில் படிக்கும் காட்டு நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு கடந்த ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்த சாதி சான்றிதழ் நடப்பாண்டில் எந்தவித முன்னறிவிப்புமின்றி நிறுத்தப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காட்டுநாயக்கர் சமுதாய பிரதிநிதிகளை அழைத்துப் பேசுவதோடு, அனைத்து சமுதாயத்தினருக்கும் வழங்கப்படுவதை போல இவர்களுக்கும் சாதிச் சான்றிதழ் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட நிர்வாகத்தையும், திமுக அரசையும் வலியுறுத்துகிறேன்.
November 15, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 குருநானக் ஜெயந்தி விழாவை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் அன்பிற்குரிய சீக்கிய மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அன்பின் அடிப்படையில் மக்களை இணைத்து மத ஒற்றுமைக்கு மகத்தான பணியை ஆற்றிய குருநானக் அவர்களின் போதனைகளை பின்பற்றி ஏற்றத் தாழ்வில்லா சமுதாயத்தை உருவாக்கிட அவர் பிறந்த இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.
November 14, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சென்னை வடபழனியில் பெண் போக்குவரத்து காவலர் மீது போதை ஆசாமி தாக்குதல் – காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத தமிழகத்தில் மக்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் ? சென்னை வடபழனியில் பெண் வியாபாரி ஒருவரிடம் தகராறில் ஈடுபட்ட போதை ஆசாமியை தட்டிக் கேட்ட போது நடத்தப்பட்ட தாக்குதலில் பெண் போக்குவரத்து காவலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே பொதுமக்கள் தொடங்கி வியாபாரிகள், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், காவலர்கள் என அனைத்து தரப்பினருக்குமே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதை தற்போது நடைபெற்றிருக்கும் இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்தியுள்ளது. தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் கஞ்சா உள்ளிட்ட கொடியவகை போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலையும், சட்டவிரோதமாக 24 மணி நேரமும் நடைபெறும் மது விற்பனையையும் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசால், மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவலர்களின் பாதுகாப்பே கேள்விக்குறியாகியிருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, சென்னை வடபழனியில் போக்குவரத்து பெண் காவலரை தாக்கிய நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகத்தில் நாள்தோறும் அதிகரித்து வரும் சட்டம் – ஒழுங்கு சீர்கேடுகளுக்கு அடிப்படையான கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு வலியுறுத்துகிறேன்.
November 14, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 குழந்தைகளின் நலன், கல்வி மற்றும் மேம்பாட்டிற்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தினமாக கொண்டாடி மகிழ்கிறோம். இன்றைய குழந்தைகள் தான் நாளைய எதிர்காலம் என்பதை உணர்ந்து அவர்களின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருப்பதோடு, குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை களையவும் நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
November 13, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஊடகத்துறையில் வெற்றிகரமாக 12 ஆண்டுகளை நிறைவு செய்து 13 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் தந்தி தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும் அதன் ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அன்றாடம் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை நடுநிலையோடு அணுகி செய்திகளாக வெளியிடுவதில் தனித்துவமிக்கதாக திகழும் தந்தி தொலைக்காட்சியின் வெற்றிப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.
November 13, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கிண்டி அரசு மருத்துவமனை மருத்துவர் மீது கத்திக்குத்து – கோத்தகிரி அரசு மருத்துவமனையில் செல்போன் டார்ச்லைட் வெளிச்சத்தில் சிகிச்சை – அடியோடு சீர்குலைந்திருக்கும் சுகாதாரத்துறையை சீரமைப்பது எப்போது ? சென்னை கிண்டியில் உள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் திரு.பாலாஜி அவர்கள் மீது நடைபெற்றிருக்கும் கத்திக்குத்து சம்பவம் தமிழகத்தில் சீர்குலைந்திருக்கும் சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. அதேபோல, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தைக்கு செல்போன் டார்ச்லைட் வெளிச்சத்தில் சிகிச்சை வழங்குவது போல வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த மூன்றாண்டுகளில் தமிழகத்தில் பொதுமக்கள் தொடங்கி அரசு ஊழியர்கள், மருத்துவர்கள் என யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதை பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத அரசு நிர்வாகத்தால், மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவரையே தாக்கும் அளவிற்கான அசாதாரண சூழலை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் மீது நடைபெற்று வரும் தொடர் தாக்குதல் சம்பவங்கள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். எனவே, ஏழை, எளிய மக்களின் நலன் கருதி அனைத்து மருத்துவமனைகளிலும் முறையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதோடு, மக்களின் உயிரை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் அரசு மருத்துவர்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
November 13, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சென்னை திருவொற்றியூரில் மாமுல் தர மறுத்த பெண் வியாபாரி ரவுடியால் கொடூரக் கொலை – ரவுடிகள் கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கத்தவறிய தமிழக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. சென்னை திருவொற்றியூர் சன்னதி தெருவில் பெண் பழ வியாபாரியை மாமுல் தர மறுத்ததாக கூறி கொடூரமாக கொலை செய்த ரவுடி, அதனை தடுக்க முயன்ற பெண்ணின் கணவரை தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் அதிகரித்துவரும் ரவுடிகள் கலாச்சாரத்தையும், கூலிப்படையையும் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை, ஆட்சியாளர்களின் ஏவல்துறையாக மட்டுமே செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் தொடங்கி அனைத்து தரப்பினரின் உயிர் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி நிகழும் கொலை, கொள்ளை, போதைப் பொருட்களின் தாராளப் புழக்கம், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் அதனை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்காத அரசு நிர்வாகத்தின் மீதும், காவல்துறையின் மீதும் நம்பிக்கை இழந்துவிட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சற்று நேரத்திற்கு முன்பாக கூட சென்னை கிண்டியில் உள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் இருவரை கத்தியால் குத்திவிட்டு அடையாளம் தெரியாத கும்பல் தப்பியோடிய சம்பவமும் நடந்தேறியுள்ளது. எனவே, இனியாவது காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து சந்தி சிரிக்கும் சட்டம் – ஒழுங்கு சீர்கேடுகளை களைய தேவையான நடவடிக்கைகளை எடுப்பதோடு, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ரவுடிகள் கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
November 13, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 விஷ ஜந்துகள் கடித்ததில் விளை நிலங்கள் டிஜிட்டல் சர்வே பணியில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி – முன் அனுபவமில்லாத கல்லூரி மாணவ, மாணவியர்களை சர்வே பணிகளில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்துவது கடும் கண்டனத்திற்குரியது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தமிழக அரசின் விளை நிலங்கள் டிஜிட்டல் சர்வே எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவி ஒருவர் விஷ ஜந்துகள் கடித்ததால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. வேளாண்மைக்கான நிலம் மற்றும் சாகுபடி பயிர் குறித்த முழுமையான விவரங்களை சேகரித்து டிஜிட்டல் மயமாக்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படும் சர்வே பணிகளில் வருவாய் துறையினரை ஈடுபடுத்தாமல், வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர்களை ஈடுபடுத்தி அவர்களின் உயிர் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய தமிழக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. டிஜிட்டல் சர்வே பணிகளுக்கு தேவையான பெரும்பாலான நிதியை மத்திய அரசு ஒதுக்கும் சூழலில், அண்டை மாநிலங்கள் அந்தந்த மாநில அரசு அதிகாரிகளை பயன்படுத்தியும், பயிற்சி பெற்ற தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் சர்வே பணிகளை செய்து வருவதாக அறியவரும் நிலையில், தமிழக அரசு மட்டுமே அரசு அதிகாரிகளை தவிர்த்து வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர்களை கட்டாயப்படுத்தி சர்வே பணிகளில் ஈடுபட வைத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. எனவே, விஷ ஜந்துகள் கடித்ததில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாணவிக்கு உரிய சிகிச்சை வழங்குவதோடு வருவாய்த்துறை மூலமாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டிய சர்வே பணிகளில் முன் அனுபவம் இல்லாத வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர்களை ஈடுபடுத்தும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
November 12, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் பகுதியில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த தேனி மாவட்டம் சங்ககோணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் திரு.N.முத்து அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இராணுவ வீரர் திரு.N. முத்து அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
November 12, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 ஒருங்கிணைந்த சென்னை மற்றும் திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்றத்தொகுதிகள் மறுசீரமைப்பு; மாவட்டக் கழக செயலாளர்கள் நியமனம்.