February 18, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளராக, திரு.A.கமுருதீன் அவர்கள் நியமனம்.
February 17, 2026 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா வரும் 24.02.2026 அன்று கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி வரும் 24.02.2026 முதல் 27.02.2026 வரை தமிழகத்தில் உள்ள அனைத்து கழக மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் கீழ்கண்ட அட்டவணையின் படி நடைபெற உள்ளது.
February 17, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சட்டமன்றத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கை எனும் பெயரில் திமுக அரசு தாக்கல் செய்த “ஏமாற்று மாடல் அறிக்கை”
February 16, 2026 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா: மதுரையில் வரும் 24ம் தேதி இதயதெய்வம் அம்மா அவர்களின் திருவுருவச்சிலைக்கு கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அன்றைய தினம் நாங்குநேரியில் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்.
February 16, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் டெண்டர்களையும், ஏலங்களையும் அள்ளி வீசும் திமுக – தேர்தல் செலவுக்காக அரசின் கஜானாவை காலியாக்கத் துடிக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் சாலை, குடிநீர் குழாய் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை சார்ந்த பணிகளுக்காக கடந்த 15 தினங்களில் மட்டும் சுமார் 5 ஆயிரம் டெண்டர்களும், ஒரே நேரத்தில் 50க்கும் அதிகமான கல்குவாரிகளுக்கு ஏலமும் அவசரகதியில் அறிவிக்கப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆட்சிக்கு வந்த ஐந்து ஆண்டுகளில் அரசுத்துறை சார்ந்த பணிகளை மேற்கொள்வதிலும், மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதிலும் மெத்தனப் போக்கையே கடைபிடித்து வந்த திமுக அரசு, சட்டமன்ற தேர்தலுக்கான கால அவகாசம் நெருங்கி வரும் நிலையில், ஒரே நேரத்தில் டெண்டர்களையும், ஏலங்களையும் அள்ளி வீசி அரசு கஜானாவை காலியாக்க முயல்வது கடும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு டெண்டர்களையும், ஏல அறிவிப்புகளையும் வெளியிட்டிருக்கும் திமுக அரசு, சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே அனைத்துவித பணிகளையும் இறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்திருப்பதன் மூலம், தேர்தல் செலவுக்காக நிதி ஆதாரங்களை பெருக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, ஆட்சிக்காலத்தின் இறுதி நேரத்தில் கிடைத்தவரை லாபம் என அரசின் கஜானாவை முழுமையாக காலியாக்கத் துடிக்கும் திமுகவுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில், இனி எக்காலத்திற்கும் ஆட்சிக்கு வரவே முடியாத அளவிற்கு தமிழக மக்கள் ஒன்றிணைந்து தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
February 16, 2026 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 உலகக் கோப்பை ஆடவர் டி20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியிருக்கும் இந்திய அணி வீரர்களுக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி பாகிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி வெற்றி கண்டிருக்கும் இந்திய அணி, அடுத்தடுத்த வெற்றிகளின் மூலம் உலகக் கோப்பையை வென்று சாதனை படைக்க மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
February 15, 2026 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இதய தெய்வம் அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கழகத்தின் சார்பில் நடைபெறுகிறது. நாங்குநேரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்கள்!
February 15, 2026 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் இதயதெய்வம் அம்மா அவர்களின் நன்மதிப்பை பெற்றவரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த திரு. ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் புதல்வரும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளருமான திரு.வீ.தமிழ் அழகன் அவர்கள் காலமான செய்தி மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது.
February 14, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: திருச்சி தெற்கு மாவட்டம், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், பகுதி மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் நியமனம்.
February 14, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு:செங்கல்பட்டு மத்திய மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் மறைமலைநகர் நகரக் கழகம் மறைமலைநகர் வடக்கு மற்றும் மறைமலைநகர் தெற்கு என இரண்டு நகர கழகங்களாக பிரிப்பு.