September 13, 2023 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தந்தை பெரியார் அவர்களின் 145வது பிறந்தநாள் விழா: சென்னையில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மரியாதை செலுத்துகிறார்கள்.
September 12, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தொழில் நிறுவனங்களுக்கான நிறும வரியை (COMPANY TAX) உயர்த்த முடிவு செய்து அறிவிப்பாணை வெளியிட்டுள்ள சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனங்களுக்கான நிறும வரியை மூன்று மடங்கு உயர்த்த உத்தேசித்திருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திமுகவின் பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்கள் மீது ஏற்கனவே சொத்துவரி, வீடு மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வு உள்ளிட்ட தாங்க முடியாத சுமைகளை ஏற்றியுள்ள நிலையில் தற்போது நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் நிறுமவரியை மூன்று மடங்கு வரை உயர்த்த முடிவு செய்திருப்பது ஒட்டுமொத்தமாக தொழில் நிறுவனங்களையே முடக்குவதற்கு சமமாகும். எனவே சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட நிறும வரி உயர்வுக்கான அறிவிப்பாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துவதோடு, இது போன்ற மக்கள் நேரடியாக பாதிக்கக்கூடிய விசயங்களில் முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
September 11, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 வடசென்னை மத்திய மாவட்டம் : ஆர்.கே நகர் மேற்கு பகுதிக் கழக செயலாளர், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பகுதிக் கழக நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள் நியமனம்
September 11, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 மத்திய சென்னை மத்திய மாவட்டம்: துறைமுகம் மேற்கு பகுதி கழக செயலாளர் நியமனம்
September 11, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 திருநெல்வேலி மாவட்டம் மறுசீரமைப்பு!
September 11, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக போராடியவரும், தீண்டாமையை ஒழிக்க முனைப்போடு பாடுபட்டவருமான திரு.இம்மானுவேல் சேகரனாரின் 66ஆவது நினைவு நாளான இன்று இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
September 8, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திரைப்பட இயக்குனரும் பிரபல நடிகருமான திரு. மாரிமுத்து அவர்கள் மரணமடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது. திரைப்படங்கள் மட்டுமல்லாது தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து, உணர்ச்சிகரமான வசனங்கள் மூலமாக தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய திரு.மாரிமுத்துவின் திடீர் மரணம் திரைத்துறைக்கும் அவரின் ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும். திரு.மாரிமுத்து அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
September 7, 2023 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 115 வது பிறந்தநாள் விழாவையொட்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழக மாவட்டங்கள் வாரியாக செப்டம்பர் 15, 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது. செப்டம்பர் 15 அன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் கலந்துகொண்டு எழுச்சி பேருரையாற்றவுள்ளார்.
September 1, 2023 In ticker 0 01.09.2023 நிர்வாகிகள் நியமனம் – செங்கல்பட்டு தெற்கு, விழுப்புரம் கிழக்கு, புதுக்கோட்டை மத்தியம், புதுக்கோட்டை தெற்கு , மதுரை புறநகர் தெற்கு, விருதுநகர் கிழக்கு, விருதநகர் மத்தியம், தென்காசி வடக்கு, திருநெல்வேலி புறநகர் மேற்கு மற்றும் தூத்துக்குடி வடக்கு ஆகிய கழக மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் நியமனம்.
August 24, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சந்திராயன்-3 விண்கலம் தொடர்பான செய்தி சேகரிக்க திருவனந்தபுரம் சென்று நெல்லைக்கு திரும்பும் வழியில் நாங்குநேரியில் ஏற்பட்ட சாலை விபத்தில் புதிய தலைமுறை நெல்லை மாவட்ட ஒளிப்பதிவாளர் சங்கர் உயிரிழந்த செய்தி வேதனை தருகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதே விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தியாளர் நாகராஜன் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் வள்ளிநாயகம், நாராயணன் ஆகியோர் விரைவில் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.