November 28, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கடலூர் வடக்கு மாவட்டம் : மங்கலூர் தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் நியமனம்.
November 28, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் : மேட்டுப்பாளையம் பேரூர் கழக நிர்வாகிகள் நியமனம்.
November 28, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் : தொட்டியம் மற்றும் தாத்தையங்கார்பேட்டை ஒன்றியம் பிரிப்பு.
November 28, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 லஞ்சப் பணத்துடன் சிக்கிய ஊட்டி நகராட்சி ஆணையரை திருநெல்வேலி மாநகராட்சி உதவி ஆணையராக நியமித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது – லஞ்சப் புகாரில் சிக்கிய அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி ஊழலை ஊக்குவிப்பது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா? நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே 11.70 லட்சம் ரூபாய் லஞ்சப் பணத்துடன் சிக்கிய ஊட்டி நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா அவர்கள், திருநெல்வேலி மாநகராட்சியின் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. விதிகளை மீறி லஞ்சம் பெற்று ஆதாரங்களுடன் கையும் களவுமாக சிக்கிய ஜஹாங்கீர் பாஷா அவர்கள், காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்ட இரு வாரத்திற்குள்ளாகவே திருநெல்வேலி மாநகராட்சியின் உதவி ஆணையராக நியமித்து திமுக அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவு ஊழலை மேலும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு, அரசு நிர்வாகத்தின் அனைத்து துறைகளிலும் எழும் ஊழல் மற்றும் முறைகேடு புகார்களை கண்டுகொள்ளாத நிலையில், தற்போது லஞ்சப் பணத்துடன் சிக்கிய ஜஹாங்கீர் பாஷா அவர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி அழகு பார்ப்பது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா ? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, லஞ்சம் வாங்கியதாக ஆதாரங்களுடன் சிக்கிய ஜஹாங்கீர் பாஷா அவர்களை திருநெல்வேலி மாநகராட்சி உதவி ஆணையராக பிறப்பித்திருக்கும் உத்தரவை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கின் படி அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
November 28, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சென்னை பல்லாவரம் அருகே அம்மா உணவகத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெண் ஊழியர் காயம் – ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கும் அம்மா உணவகங்களை முறையாக பராமரிக்கத் தவறிய திமுக அரசுக்கு கடும் கண்டனம். சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் அருகே இயங்கி வரும் அம்மா உணவகத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் அங்கு உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஊழியர் ஒருவர் காயமடைந்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கும் வகையிலும், மலிவு விலையில் தரமான உணவு வழங்கும் நோக்கத்திலும் இதயதெய்வம் அம்மா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட அம்மா உணவகங்களை முறையாக பராமரிக்கத் தவறிய திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி கடும் கண்டனத்திற்குரியது. அம்மா உணவகங்களை மேம்படுத்த கடந்த ஜூலை மாதம் ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் 21 கோடி ரூபாயில் அம்மா உணவகங்களின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தவோ, உணவின் தரத்தை மேம்படுத்தவோ எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் பல்வேறு பகுதிகளில் அம்மா உணவகங்கள் மூடப்பட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே, லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்களின் பசியை போக்கும் மையங்களாக செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களை முடக்கும் நடவடிக்கைகளை கைவிட்டு, போதுமான நிதியை ஒதுக்கி ஆரோக்கியமான முறையில் அம்மா உணவகங்கள் தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
November 27, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 டெல்டா மாவட்டங்களில் இடைவிடாது பெய்துவரும் கனமழையால் நீரில் மூழ்கி சேதமடைந்திருக்கும் நெற்பயிர்கள் – பாதிப்புகளை முறையாக கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். வங்கக் கடலில் உருவாகியிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெய்துவரும் தொடர் கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையின் படி திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை தொடரும் பட்சத்தில் ஏக்கருக்கு சுமார் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட நெற்பயிர் சாகுபடி முழுமையாக பாதிப்புக்குள்ளாகி பெரும் இழப்பை சந்திக்கக் கூடிய சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் போது பெய்யும் கனமழையால் விவசாய நிலங்களில் தேங்கும் மழைநீரை உடனடியாக வெளியேற்றும் வகையில் வடிகால்களை முறையாக தூர்வாரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அரசு நிர்வாகம் அலட்சியாக எதிர்கொண்டதன் விளைவே நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, தொடர் கனமழையால் நீரில் மூழ்கி சேதமடைந்திருக்கும் நெற்பயிர்களை முறையாக கணக்கிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீடு தொகையை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
November 27, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கழக அமைப்பு செயலாளர், காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்டக் கழக செயலாளர்கள், கழக சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு செயலாளர், கழக இதயதெய்வம் அம்மா பேரவை தலைவர் நியமனம்
November 27, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 செங்கல்பட்டு வடக்கு மாவட்டம்: மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், ஆலந்தூர் கிழக்கு, ஆலந்தூர் மேற்கு, சோழிங்கநல்லூர் தெற்கு பகுதிக் கழக நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள், பரங்கிமலை கிழக்கு ஒன்றியக் கழக நிர்வாகிகள், ஒன்றிய ஊராட்சி கழக செயலாளர்கள் நியமனம்.
November 27, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 காஞ்சிபுரம் மாவட்டம்:காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் நியமனம்.
November 27, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருப்பூர் மாநகர் மாவட்டம் : திருப்பூர் வடக்கு சட்டமன்றத்தொகுதி பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், பாண்டியன் நகர் பகுதிக் கழக செயலாளர் நியமனம்.