வங்கக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 19 மீனவர்களை கைது செய்ததோடு அவர்களின் படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் அழிந்துவிடும் அபாயம் எழுந்துள்ளது. ஒவ்வொரு முறையும் இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்படும் போதும் தாக்குதல் நடத்தப்படும் போதும் வெறும் கடிதம் மட்டுமே எழுதும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் மீனவர்கள் நலனை காக்க மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க தயங்குவது ஏன்? ஆகவே, கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை மீட்கவும் மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதோடு இலங்கை கடற்படையினரின் அத்து மீறலுக்கு இனியாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

திமுக ஆட்சியில் கடந்த ஓராண்டில் மட்டும் நான்காவது முறையாக பால் பொருட்களின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. ஆவின் நிர்வாகம் மூலம் தயாரிக்கப்படும் பால் பொருட்களான நெய் லிட்டருக்கு 70 ரூபாயும், வெண்ணெய் கிலோவுக்கு 30 ரூபாயும் உயர்த்தப்பட்டு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் வரலாறு காணாத வகையில் பால் பொருட்களின் விலையை தொடர்ந்து உயர்த்திக் கொண்டே செல்வது மக்கள் மனதில் வெறுப்பை விதைக்கும் செயலாகும். எனவே, உயர்த்தப்பட்டுள்ள நெய் மற்றும் வெண்ணெய் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் அரசு நிறுவனமான ஆவின் நிர்வாகம் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.