October 20, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு பெறுவதில் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளின் பெயர் விடுபட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசு உடனடியாக இப்பிரச்னையைக் கவனித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும். ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்தே வேளாண் பயிர்க்காப்பீட்டில் அலட்சியம் காட்டி வரும் தி.மு.க அரசு, இதிலும் கோட்டை விட்டுவிடக்கூடாது.
October 16, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்ப் பத்திரிகை உலகில் குறிப்பிடத்தக்க ஆளுமையான ‘மாலை முரசு’ அதிபர் பா.ராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் நினைவு நாள் இன்று! பத்திரிகை நடத்துவது என்பது வெறும் தொழில் மட்டுமல்ல என்ற உணர்வோடு, தமிழர் நலனில் மிகுந்த அக்கறையோடு ஆற்றிய பணிகளைப் போற்றிடுவோம்!
October 11, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 போக்குவரத்துக் கழகம், மின்சார வாரியம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் உள்ளிட்ட தமிழக அரசின் சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் தீபாவளி போனஸ் உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும்.
October 5, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அண்ணல் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை மிலாது நபியாகக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்!
October 3, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 செய்யும் தொழிலைப் போற்றி வணங்கும் ஆயுத பூஜையையும், வெற்றித்திருநாளான விஜயதசமியையும் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!
September 16, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 “இந்திய விடுதலைக்காக பாடுபட்டவரும், மிகப்பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உழைத்தவருமான திரு. எஸ். எஸ். ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாள் இன்று! தமிழக அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து அவர் ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்து போற்றிடுவோம்!”
September 15, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில் கழகத்தின் தொழிற்சங்க அமைப்பான இதயதெய்வம் அம்மா தொழிற்சங்க பேரவையின் கொடி, தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில் இன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
September 7, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பொன் ஓணம் திருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், மன நிறைவையும் கொண்டு வந்து சேர்க்கிற திருநாளாக அமைய வாழ்த்துகள்!