August 15, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: மதுரை புறநகர் வடக்கு மாவட்டம், மேலூர் மேற்கு ஒன்றியம், புலிப்பட்டி ஊராட்சிக் கழக செயலாளர் திரு.M.போஸ் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
August 15, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி : திருநெல்வேலி மாநகர் மாவட்டம், நாங்குநேரி ஒன்றியம், கூந்தன்குளம் ஊராட்சிக் கழக செயலாளர் திரு.S.தளவாய்மணி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
August 15, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தஞ்சாவூர் அருகே கஞ்சா போதைக் கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளான இளம்பெண் – குற்றவாளிகள் யாராக இருப்பினும் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இளம்பெண் ஒருவர் அவரின் சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டிற்கு வருகை தந்திருந்த போது அங்கிருந்த கஞ்சா போதைக் கும்பலால் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள நால்வரில், முதல் குற்றவாளியான கவிதாசன் என்பவர் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நற்பணி மன்ற நிர்வாகி என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிவரும் நிலையில், கைதான மற்றவர்கள் மீதும் ஏற்கனவே கொலை உள்ளிட்ட வழக்குகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி போதைப் பொருள் கடத்தலில் தொடங்கி, பாலியல் வன்கொடுமை வரை தமிழகத்தில் அரங்கேறும் பல்வேறு குற்றச்சம்பவங்களுக்கும் திமுகவினருக்குமான தொடர்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், அதனை கண்டும் காணாமல் கடந்து செல்லும் திமுக தலைமையின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் அடிக்கடி அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள், போதைப் பொருட்களின் தாராளப் புழக்கம் குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால், தற்போது இளம்பெண் ஒருவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யும் அளவிற்கான துணிச்சலை போதைக் கும்பலுக்கு ஏற்படுத்தியுள்ளது. எனவே, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது எந்தவித பாரபட்சமுமின்றி கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனியாவது சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளில் கூடுதல் கவனம் செலுத்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
August 14, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 விழுப்புரம் அருகே அரசின் செயல்பாடுகளை விமர்சித்த பள்ளி மாணவர் மீது கொடூரத் தாக்குதல் – அடக்குமுறையை கையாளும் திமுகவினரின் அராஜகப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சேதமடைந்த சாலைகளை சுட்டிக்காட்டி அரசை விமர்சனம் செய்த 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர் மீது அப்பகுதி திமுகவினர், கொடூரத் தாக்குதல் நடத்தியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் தமிழகமெங்கும் குண்டும் குழியுமாக சேதமடைந்திருக்கும் சாலைகளை சீரமைக்கவோ, மேம்படுத்தவோ திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், சாலையின் தரம் குறித்து விமர்சனம் செய்த பள்ளி மாணவரை கண்மூடித்தனமாக தாக்கியிருக்கும் திமுகவினரின் அராஜகப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. அரசு நிர்வாகத்தின் குறைகளை சுட்டிக்காட்டும் போது அதனை நிவர்த்தி செய்ய முன்வராமல், புகார் கூறுவோர்கள் மீது தாக்குதல் நடத்தி அடக்குமுறையை கையாள்வதன் மூலம் இது எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சியா ? இல்லை குறையை சொல்லவே விடாத ஆட்சியா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. எனவே, பள்ளி மாணவரை தாக்கிய திமுகவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற அராஜகப் போக்கில் ஈடுபடாத வகையில் திமுகவினருக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என முதலமைச்சரும் திமுக தலைவருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
August 14, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழப்பு – ஏழைத் தொழிலாளர்களின் உயிரைப் பறிக்கும் பட்டாசு ஆலை விபத்துக்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பது எப்போது? விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மாயத்தேவன்பட்டியில் இயங்கிவரும் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், அங்கு பணியாற்றிவந்த இரு தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் ஏற்படுத்துகின்றன. தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமலும், முறையான உரிமம் பெறாமலும் இயங்கி வரும் தனியார் பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துக்களும், அதில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் உயிரிழப்பதும் தொடர்கதையாகி வருகிறது. விதிகளை மீறி இயங்கும் பட்டாசு ஆலைகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால், பட்டாசுத் தொழிலை நம்பியிருக்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, இனியும் அலட்சியும் காட்டாமல், தமிழகம் முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகளிலும் உரிய ஆய்வுகளை மேற்கொள்வதோடு, இனி வரும் காலங்களில் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படா வண்ணம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
August 14, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து நம் தாய் திருநாடு விடுதலைபெற்ற இந்த இனிய நன்னாளில் நம்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
August 13, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களின் விலையை முன்னறிவிப்பின்றி உயர்த்திருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது – கல்வி தான் யாராலும் பறிக்க முடியாத சொத்து என ஒருபுறம் முழங்கிவிட்டு, மற்றொருபுறம் பாடப்புத்தகங்களின் விலையை உயர்த்துவது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா ? தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலமாக அச்சடிக்கப்பட்டு தனியார் பள்ளிகளுக்கு விற்பனை செய்யப்படும் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களின் விலை சுமார் 40 சதவிகிதம் அளவிற்கு உயர்த்தப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. 390 ரூபாயாக இருந்த ஒன்றாம் வகுப்பு பாடப்புத்தகங்கள் 550 ரூபாயாக உயர்த்தப்பட்டதில் தொடங்கி, 790 ரூபாயாக இருந்த பத்தாம் வகுப்பு பாடப்புத்தகங்கள் 1,130 ரூபாய் என அனைத்து வகையான பாடப்புத்தகங்களின் விலையையும் திடீரென உயர்த்தியிருப்பது தனியார் பள்ளிகளின் நிர்வாகத்திற்கும், அப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கல்வி தான் யாராலும் பறிக்க முடியாத சொத்து என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மேடைக்கு மேடை ஒருபுறம் முழங்கி வரும் நிலையில், மற்றொருபுறம் பாடப்புத்தகங்களின் விலையை உயர்த்தி தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் மற்றும் போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களையும் மேலும் மேலும் சிரமத்திற்குள்ளாக்குவது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா ? என மக்களே கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே, திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் அதிகரிக்கும் வேலைவாய்ப்புத் திண்டாட்டம், தலைவர் இல்லாமல் இயங்கும் டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் நடத்தும் தேர்வுகளில் ஏற்படும் குளறுபடிகள் என பல்வேறு சவால்களுக்கு மத்தியில் போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் தமிழக இளைஞர்களுக்கு உதவும் பாடப்புத்தகங்களின் விலையையும் உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, தனியார் பள்ளி மாணவ, மாணவியர்களில் தொடங்கி அரசுப் பணி கனவில் இரவு, பகல் பாராமல் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் வரை பாதிப்பை ஏற்படுத்தும் பாடப்புத்தகங்களின் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு பாடநூல் கழகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
August 11, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நாடுபோற்றும் நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி தமிழக மக்களால் பெரிதும் நேசிக்கப்படக் கூடிய தலைவர்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மற்றும் இதயதெய்வம் அம்மா அவர்கள் குறித்து திமுக அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்களின் தரக்குறைவான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. மறைந்த திமுக தலைவர் திரு. கருணாநிதி அவர்கள் குறித்து மறைந்த திரு. நாஞ்சில் மனோகரன் அவர்கள் எழுதிய “கருவின் குற்றம்” என்ற கவிதை குறித்தும் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய “வனவாசம்” குறித்தும் இதயதெய்வம் அம்மா அவர்களின் தொண்டர்கள் பேச ஆரம்பித்தால் தா.மோ.அன்பரசன் போன்ற திமுகவினர்களில் ஒருவர் கூட வெளியில் தலைகாட்ட முடியாத சூழல் ஏற்படக்கூடும். எனவே, தமிழக மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு வாழ்ந்து மறைந்த தலைவர்கள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் திமுகவினரை பேச விட்டு ரசிக்கும் கீழ்த்தரமான செயல்களை அடியோடு நிறுத்துவதோடு, இதுபோன்ற தரக்குறைவான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுமாறு திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
August 11, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக செய்தி வெளியீடு: தமிழர் தந்தை திரு.சி.பா.ஆதித்தனார் அவர்களின் புதல்வர் திரு.ராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாள்; கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், மாலை முரசு அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு கழக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
August 11, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழர் தந்தை திரு.சி.பா.ஆதித்தனார் அவர்களின் புதல்வரும் மாலை முரசு பத்திரிகையின் அதிபருமான திரு.ராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாள் இன்று. தந்தையை பின்பற்றி பத்திரிகை துறையில் நுழைந்து தமிழ் மொழி மற்றும் தமிழக மக்கள் நலனில் அளவற்ற அக்கறையும் ஆர்வமும் கொண்டிருந்த திரு.ராமச்சந்திர ஆதித்தனார் அவர்கள் பிறந்த இந்நாளில் அவர் ஆற்றிய நற்பணிகளையும், நிகழ்த்திய சாதனைகளையும் போற்றுவோம்.