தலைமைக் கழக அறிவிப்பு: தாய்மொழி தமிழுக்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் மொழி ஆதிக்கத்தை தீரத்துடன் எதிர்த்து தன்னுயிர் நீத்த தியாகத் தீபங்களான மொழிப்போர் தியாகிகளுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் 25.01.2025 (சனிக்கிழமை) அன்று தமிழகம் முழுவதும் வீரவணக்கம் செலுத்திடுவோம். தமிழகத்திலுள்ள அனைத்து கழக மாவட்டங்களிலும் மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு மலரஞ்சலி செலுத்திடுவதோடு, அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் பொதுக்கூட்டத்தை மாவட்டக் கழகச் செயலாளர்களுடன், மாணவர் மற்றும் மாணவியர்அணி நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சென்னை தாம்பரம் – முடிச்சூர் சாலையில் பெண் காவலரிடம் செயின் பறிப்பு – காவலர்களிடமே திருடர்கள் கைவரிசை காட்டும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது. சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் பணிபுரிந்து வரும் பெண் காவலர் ஒருவர், தாம்பரம் – முடிச்சூர் சாலையில் உள்ள தனது இல்லத்திற்கு சென்று கொண்டிருந்த வேளையில் அப்பகுதியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், காவலரின் செயினை பறித்துவிட்டு தப்பியோடியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பெண் காவலர் அளித்த புகாரின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் சேலையூர், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் என அடுத்தடுத்து எட்டு இடங்களில் அதே கொள்ளையர்கள் ஒரே நாளில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தை பார்க்கும் போது தமிழகத்தில் காவல்துறை முற்றிலும் முடங்கியுள்ளதா ? அல்லது முடக்கப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், இனியாவது கண்விழித்து இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெறாத வகையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

உலகிலேயே தொண்டர்களின் விருப்பத்திற்காகவும், ஏழை, எளிய மக்களின் நல்வாழ்வுக்காகவும் ஒரு இயக்கத்தை தொடங்கி, தான் உயிரோடு இருக்கும் வரை அந்த இயக்கத்தை ஆட்சி பீடத்தில் அமர வைத்திருந்த புரட்சித் தலைவர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த தினம் இன்று… தர்மத்தாயின் தலை மகனாக, தமிழ்நாட்டின் ஒளி விளக்காக, பாமர மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக, நாடி வருவோரின் வறுமையை போக்கும் வள்ளலாக திகழ்ந்த மக்கள் திலகம் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் வழியில் தொடர்ந்து பயணிக்க இந்நாளில் உறுதியேற்போம்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.