January 21, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 விருதுநகர் கிழக்கு மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்.
January 21, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 விருதுநகர் மத்திய மாவட்டக் கழக நிர்வாகிகளாகவும், பகுதிக் கழக செயலாளர்களாகவும், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகளாகவும் நியமனம்.
January 21, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 விருதுநகர் மேற்கு மாவட்டக் கழக நிர்வாகிகளாகவும், பொதுக்குழு உறுப்பினர்களாகவும், ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர் கழக செயலாளர்களாகவும், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்களாகவும் நியமனம்.
January 21, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 புகாரை ஏற்க மறுத்ததால் காவல்நிலையம் முன்பாகவே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற கூலித் தொழிலாளி – அலட்சியமாக செயல்பட்ட ஆர்.கே.நகர் காவல்நிலைய காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தின் முன்பாக, பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் உடல் முழுவதும் எரிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. புளியந்தோப்பு பகுதியில் பட்டறை ஒன்றில் பணிபுரியும் சிலரால் தனது உயிருக்கு ஆபத்தான சூழல் நிலவுவதாகக் கூறி ஆர்.கே.நகர் காவல்நிலையத்தில் கூலித் தொழிலாளி அளித்த புகாரை ஏற்க மறுத்ததோடு, அவரை தரக்குறைவாக நடத்தியதே தற்கொலை முயற்சிக்கான முக்கிய காரணம் என கூறப்படுகிறது. மக்களின் குறைகளையும், துன்பங்களையும் போக்கி உரிய பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை, ஆளுங்கட்சியின் ஏவல்துறையாக மாறியிருப்பதே இதுபோன்ற துயரச் சம்பவங்கள் காவல்நிலையம் முன்பாகவே அரங்கேற காரணமாக அமைந்துள்ளது. ஏற்கனவே, திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் காவல்நிலைய சித்ரவதைகளும், மரணங்களும் அதிகரித்து வருவதாக சொல்லப்படும் சூழலில், தற்போது புகார் அளிக்க வருவோரையும் தொடர்ந்து தரக்குறைவாக நடத்தி அலட்சியமாக செயல்படும் ஒரு சில காவலர்களால் ஒட்டுமொத்த காவல்துறை மீதும் மக்கள் மத்தியில் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எனவே, ஆர்.கே.நகர் காவல்நிலையம் முன்பாக நடைபெற்ற கூலித்தொழிலாளி தற்கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, காவலர்கள் அலட்சியமாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
January 20, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 புதுக்கோட்டை அருகே கனிமவளக் கொள்ளை குறித்து புகார் அளித்த சமூக ஆர்வலர் லாரி ஏற்றி படுகொலை – இயற்கை வளங்களோடு, சமூக ஆர்வலர்களையும் பாதுகாக்கத் தவறிய திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திரு. ஜெகபர் அலி அவர்கள், பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. திருமயம் பகுதியில் உள்ள மலைகளை உடைத்து இயற்கை வளங்களை கொள்ளையடித்துச் செல்லும் சமூக விரோதிகள் மீது வட்டாட்சியர் தொடங்கி மாவட்ட ஆட்சியர் வரை புகார் அளித்ததோடு நீதிமன்றத்திலும் வழக்கு நடத்தி வந்த திரு. ஜெகபர் அலி அவர்கள் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் கனிம வளக் கொள்ளையை தடுத்து நிறுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, அது தொடர்பாக புகார் அளிக்கும் இயற்கை ஆர்வலர்களையும் பாதுகாக்கத் தவறியதே திரு.ஜெகபர் அலி அவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, சமூக ஆர்வலர் திரு.ஜெகபர் அலி அவர்கள் கொலை தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனி வரும் காலங்களில் கனிம வளக் கொள்ளையை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
January 20, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்- அம்மா மக்கள் முன்னேற்றக் கழக விருதுநகர் மத்தியம், விருதுநகர் கிழக்கு மற்றும் விருதுநகர் மேற்கு ஆகிய கழக மாவட்டங்களுக்குட்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் வருகிற 25.01.2025, சனிக்கிழமை அன்று காலை 10 மணியளவில் விருதுநகர் மாவட்டம் பாரதி நகரில் அமைந்துள்ள சோலை ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விருதுநகர் மத்தியம், விருதுநகர் கிழக்கு மற்றும் விருதுநகர் மேற்கு ஆகிய கழக மாவட்டங்களைச் சார்ந்த அனைத்து நிலையிலான கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
January 19, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பாடப்புத்தகங்களை அச்சடிக்கும் பணியை அண்டை மாநிலத்திற்கு வழங்குவதா ? – அச்சுத் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் புத்தகங்களை அச்சிடும் பணியில் 30 சதவிகிதம் ஆந்திர மாநிலத்தில் உள்ள அச்சகங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலுக்கு அடுத்தபடியாக அச்சுத்தொழில் விளங்கி வரும் நிலையில், அங்குள்ள அச்சகங்களை புறக்கணித்துவிட்டு, அண்டை மாநிலத்திற்கு அப்பணியை வழங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசின் இம்முடிவால், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே நடைபெறும் இந்த அச்சுத் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் அச்சக உரிமையாளர்களோடு, அதில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் புத்தகங்கள் அனைத்தும் தமிழகத்திலேயே அச்சிடும் அளவிற்கான அச்சகங்கள் இருந்தும் அண்டை மாநிலங்களுக்கு அப்பணியை வழங்குவது ஏன்? என அச்சக உரிமையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, ஆந்திர மாநிலத்தில் உள்ள அச்சகங்களுக்கு வழங்கப்பட்ட பாடப்புத்தகங்கள் அச்சடிக்கும் பணிக்கான ஆணையை உடனடியாக ரத்து செய்வதோடு, அச்சுத்தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் உரிமையாளர்களும், தொழிலாளர்களும் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் உள்ள அச்சகங்களுக்கே முழு பணியையும் வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
January 19, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: செங்கல்பட்டு மத்திய மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை மற்றும் இளைஞர் பாசறை ஆகிய சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
January 19, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: திருவள்ளூர் மேற்கு மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் திருவாலங்காடு கிழக்கு ஒன்றியக் கழக நிர்வாகிகள் நியமனம்:
January 19, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: தாய்மொழி தமிழுக்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் மொழி ஆதிக்கத்தை தீரத்துடன் எதிர்த்து தன்னுயிர் நீத்த தியாகத் தீபங்களான மொழிப்போர் தியாகிகளுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் 25.01.2025 (சனிக்கிழமை) அன்று தமிழகம் முழுவதும் வீரவணக்கம் செலுத்திடுவோம். தமிழகத்திலுள்ள அனைத்து கழக மாவட்டங்களிலும் மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு மலரஞ்சலி செலுத்திடுவதோடு, அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் பொதுக்கூட்டத்தை மாவட்டக் கழகச் செயலாளர்களுடன், மாணவர் மற்றும் மாணவியர்அணி நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.