March 15, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தீயசக்தி திமுகவின் ஆட்சி அமைந்து 2 ஆண்டு காலம் ஆவதற்கு உள்ளாகவே அக்கட்சியின் உட்கட்சி பூசலால் எழுந்துள்ள மோதலில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருச்சியில் திமுக அமைச்சருக்கும், திமுக எம்பிக்கும் இடையேயான மோதலால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டிருக்கிறது. ரவுடிகளைப் போல திமுகவினர் திருச்சி நீதிமன்ற காவல் நிலையத்தில் புகுந்து பெண் காவலரை தாக்கியதில் அவரது கை எலும்பு முறிந்து படுகாயம் அடைந்திருக்கிறார். திமுகவினரின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். தீய சக்திகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான தருணத்தை மக்கள் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கின்றனர். இதில் சம்பந்தப்பட்ட அனைவரும், சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெறுவதை தமிழக அரசு உறுதி செய்யுமா?
March 15, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 6ஆம் ஆண்டு தொடக்க விழாக் கொண்டாட்டம்!
March 13, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 6ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்: புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மையான ஆட்சியை அமைத்திட சபதமேற்போம்! நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாவோம்!
March 13, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்பு செயலாளர், கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர், கழக இளம்பெண்கள் பாசறை செயலாளர் நியமனம்.
March 13, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தாயன்புடன் யானைகளை பராமரிக்கும் தமிழ்நாட்டின் முதுமலையை சேர்ந்த தம்பதி குறித்த ஆவண குறும்படமான ‘The Elephant Whisperers’ உலகின் உயரிய விருதான ஆஸ்கர் விருதை வென்றிருப்பது பெருமிதத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கின்றது.அதே போல இந்திய மொழிகளில் வெளியான ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தின் ”நாட்டு நாட்டு” பாடல் ஆஸ்கர் விருது பெற்று சாதனை படைத்திருப்பதும் கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்கர் விருதுகள் கிடைக்க காரணமாக இருந்த படைப்பாளர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் என் அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
March 13, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கழக இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பிலிருக்கும் திருமதி.கிருஷ்ணகுமாரி (எ) கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் அவர்கள் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.
March 12, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்நாட்டில் 2022-23 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன். வெற்றி, தோல்வியை கருத்தில் கொள்ளாமல் மன அழுத்தம் இன்றி தன்னம்பிக்கையுடன் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன். தமிழ்நாட்டின் எதிர்காலத்தை கட்டமைக்கும் வகையில் அனைத்து துறைகளிலும் இன்றைய மாணவர்கள் வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்றும் விரும்புகின்றேன்.
March 11, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 சிவகங்கை மாவட்டம், இளையான்குடி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் பொறுப்பிலிருக்கும் திரு.R.கரிகாலன், இளையான்குடி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பொறுப்பிலிருக்கும் திரு.V.M.ரவிச்சந்திரன் ஆகியோர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்றுமுதல் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
March 9, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 6ஆம் ஆண்டு தொடக்க விழா: சென்னை தலைமைக் கழக அலுவலகத்தில் பொதுச்செயலாளர் அவர்கள் கழக கொடியேற்றுகிறார்கள்!
March 9, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஆன்லைன் சூதாட்டத் தடை சட்ட மசோதாவை ஆளுநர் இரண்டாவது முறையாக மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்பி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் இளைஞர்கள் உள்ளிட்ட பல தரப்பினரை அடிமைப்படுத்திய ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களின் உயிரோடும், சமுதாய நலத்தோடும் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் தமிழக அரசும், ஆளுநரும் இணைந்து சட்டமசோதா விரைவில் அமலுக்கு வருவதற்கு வழிவகுப்பது மட்டுமே இன்றைய சூழலுக்கு அவசர அவசிய தேவையாகும். வலுவான ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் அமலுக்கு வந்தால் மட்டுமே அநியாய உயிரிழப்புகள் தடுக்கப்படும் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.