மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் பூம்புகாரில் தொடங்கவிருந்த “மண்ணின் மக்களின்” நடைபயணத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது – நீர்வளத்தையும், நில வளத்தையும் பாதுகாக்க வலியுறுத்தும் நடைபயணத்தைத் தடுப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. காவிரிப் படுகை முழுவதையும் பாதுகாக்கும் நோக்கத்தில் “வேளாண் மண்டலப் பாதுகாப்பை உறுதி செய்வோம்” எனும் முழக்கத்தை முன்னிறுத்தி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் பூம்புகார் முதல் தஞ்சாவூர் வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நடைபயணத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விளைநிலங்கள் விளைநிலங்களாகவே தொடர வேண்டும், கடற்பகுதியில் எரிவாயு – எண்ணெய் கிணறுகள் அமைப்பதை தடைசெய்ய வேண்டும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறவிருந்த நடைபயணத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த பேராசிரியர் திரு.சுல்தான் இஸ்மாயில் அவர்கள் தலைமையிலான குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் அதன் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, நீர்வளத்தையும், நிலவளத்தையும் பாதுகாக்க வலியுறுத்தும் நடைபயணத்திற்கு அனுமதியை தர மறுப்பது எந்த வகையில் நியாயம்? என சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் நடைபயணத்திற்கு உரிய அனுமதியை உடனடியாக வழங்குவதோடு, பேராசிரியர் திரு.சுல்தான் இஸ்மாயில் அவர்களின் ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகளை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தீவிர பற்றாளரும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த உறுப்பினருமான திரு.பூமிநாதத் தேவர் அவர்கள் வயது முதிர்வு காரணமாக இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. திரு.பூமிநாதத் தேவர் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

தமிழகத்தில் பாமர மக்களுக்கும் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவரும், பத்திரிகை உலகின் ஜாம்பவனாக வலம் வந்தவருமான பத்மஸ்ரீ பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாளையொட்டி கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள திரு.பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த திருவுருவ படத்திற்கு கழக துணைப் பொதுச்செயலாளரும், தென்சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு.G.செந்தமிழன், கழக அமைப்பு செயலாளரும், கழக பொறியாளர் அணி செயலாளரும், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட கழக செயலாளருமான திரு.ம.கரிகாலன், மத்திய சென்னை மேற்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.V.சுகுமார் பாபு, மத்திய சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.L.ராஜேந்திரன், வடசென்னை கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.C.P.ராமஜெயம், வடசென்னை மேற்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.பி.ஆனந்தன், மத்திய சென்னை மத்திய மாவட்டக் கழக செயலாளர் திரு.ஹாஜி K.முகமது சித்திக், ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் – கோரிக்கைகளை நிறைவேற்றவோ, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தும் திமுக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. அரசுத்துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோரை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், பதவி உயர்வில் 4 சதவிகித இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும், சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வை நடத்த வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துவகை மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் குடும்பத்துடன் சென்னை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் நடத்தும் ஒவ்வொரு போராட்டத்தின் போதும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து வாக்குறுதியளிக்கும் திமுக அரசு, அதனை நிறைவேற்றவோ, நடைமுறைப்படுத்தவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காததே, மாற்றுத்திறனாளிகளை காலைவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் அளவிற்கான சூழலுக்கு தள்ளியுள்ளது. சென்னை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் இன்று காலை முதல் குடும்பத்தினருடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாற்றுத்திறனாளிகளை பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்காமல் காலம் தாழ்த்தும் அத்துறை அதிகாரிகளின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. எனவே, குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதோடு, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.