March 15, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திமுக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை: விவசாயத்தை பாதுகாக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் எந்த வகையிலும் உதவாத வெற்று அறிக்கை!
March 15, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 வெற்றிக்கனியை எட்டிப் பிடிக்கும் எட்டாம் ஆண்டில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்! சத்திய சோதனைகளைத் தாண்டி புதிய சரித்திரம் படைப்போம்; தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை அமைத்திடுவோம்!
March 14, 2025 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருச்சி தெற்கு மாவட்டம், திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த கழக செயல்வீரர்கள் – செயல் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது நடைபெற்றது. கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கழக பொதுச்செயலாளர் அவர்கள் கழக வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்கள்.
March 14, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 “எல்லார்க்கும் எல்லாம்” என்ற தலைப்பில் “எவருக்கும் எதுவுமில்லை” என்பதை உறுதிபடுத்தும் திமுக அரசின் நிதிநிலை அறிக்கை!
March 14, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி:கழக இளைஞர் பாசறை துணைச்செயலாளர் திரு.G.அசோக்குமார் அவர்களின் தந்தையார் திரு.கெவரன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
March 14, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி:சிவகங்கை மாவட்டக் கழக அவைத்தலைவர் திரு.U.சொக்கநாதன் அவர்களின் மனைவி திருமதி.சொ.வைஜெயந்தி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
March 14, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 வண்ணங்களின் திருவிழாவான ஹோலிப் பண்டிகையை உற்சாகத்தோடு கொண்டாடி மகிழும் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தீமைகள் விலகி நன்மைகள் பிறக்கும் நாளாகவும், சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும் கொண்டாடப்படும் இந்த ஹோலிப் பண்டிகை, மக்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும் அமைதியையும் தரும் பண்டிகையாக அமையட்டும்.
March 13, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி ஆகிய சட்டமன்றத்தொகுதிகளைச் சார்ந்த கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.
March 13, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திருப்பூர் அருகே தோட்ட இல்லத்தில் வசித்து வந்த வயதான தம்பதியர் படுகொலை – அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலை, கொள்ளைகள் நிறைந்த மாநிலமாக மாற்றிய திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே ஊஞ்சப்பாளையம் கிராமத்தில் உள்ள தோட்ட இல்லத்தில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இதே திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு இறுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் இதுவரை கைதுசெய்யப்படாத நிலையில், தற்போது அரங்கேறியிருக்கும் மற்றொரு படுகொலைச் சம்பவம் தமிழக காவல்துறையின் தோல்வியையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது. திருப்பூர் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே தனியாக வசித்துவரும் முதியவர்கள் குறிவைக்கப்பட்டு கொலை செய்யப்படுவதும், அவர்களின் இல்லங்களில் இருக்கும் நகை, பணம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் திருடப்படுவதும் தொடர்கதையாகி வருவது ஒட்டுமொத்த முதியவர்கள் மத்தியிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தலைவிரித்தாடும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைய வேண்டிய காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சரோ, தேவையற்ற பிரச்னைகளை கிளப்பி தமிழக மக்களை திசை திருப்புவதிலும் தமிழகத்தை போராட்டக் களமாக மாற்றுவதிலும், கவனம் செலுத்தி வருவதே இதுபோன்ற சம்பவங்கள் தொடர காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, திருப்பூர் வயதான தம்பதியர் கொலைவழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி, குற்றவாளிகளை கண்டறிந்து கடுமையான தண்டனையை பெற்றுத் தருவதோடு, சட்டம் ஒழுங்கில் கூடுதல் கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
March 12, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி:திருப்பூர் புறநகர் மாவட்டம், சின்னக்காம்பளையம் பேரூர் கழக செயலாளர் திரு.R.கந்தசாமி அவர்களின் தந்தை திரு.ராமசாமி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.