April 17, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஆங்கிலேய ஆதிக்கத்தை துணிச்சலோடு எதிர்த்து விடுதலை வேட்கையுடன் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் முதன்மையானவராக விளங்கிய தீரன் சின்னமலை அவர்களின் பிறந்தநாள் இன்று. ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு அடங்க மறுத்து தன் வீரத்தாலும், அசாத்திய திறமையாலும் அவர்களை புறமுதுகிட்டு ஓடச் செய்த மாவீரன் தீரன் சின்னமலை அவர்களின் புகழ் வீரவரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
April 16, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நாடாளுமன்ற மக்களவையில் இதயதெய்வம் அம்மா அவர்களின் குரலாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் குரலை ஒலிக்கச் செய்வோம்; நிர்வாகச் சீர்கேடுகளால் சீரழிந்து கொண்டிருக்கும் தமிழகத்தை மீட்டெடுக்க மக்கள் அனைவரும் உறுதியேற்போம்!
April 14, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கற்பி, ஒன்று சேர், புரட்சி செய் என முழங்கி ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி வளர்ச்சியில் பெரும்பங்காற்றியவரும், இந்திய அரசியல் சாசனத்தை வகுத்துக் கொடுத்தவருமான சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் இன்று. தீண்டாமையை ஒழிக்கவும், சாதி ஏற்றத் தாழ்வுகளை அகற்றி சமத்துவமிக்க சமுதாயத்தை நிலைநாட்டவும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த தேசியத் தலைவர் அம்பேத்கர் அவரின் அரும்பணிகளை எந்நாளும் போற்றி மகிழ்வோம்.
April 14, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மலையாளப் புத்தாண்டை விஷு திருநாளாக உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த விஷு திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பண்பாட்டையும், பாரம்பரிய மரபுகளையும் பேணிக்காப்பதில் முன்னுதாரணமாக திகழும் மலையாள மக்கள் அனைவருக்கும் அன்பு, அமைதி, இன்பம் மற்றும் வளத்தை கொடுக்கும் ஆண்டாக இப்புத்தாண்டு அமையட்டும்.
April 13, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ தேர்தல் அறிக்கைகள் | Election Reports‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் – 2024: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடும் தேனி நாடாளுமன்றத்தொகுதிக்கான பிரத்யேக வாக்குறுதிகள் வெளியீடு!
April 13, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக உலகமெங்கும் கொண்டாடி மகிழும் அன்பிற்குரிய தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இனிய குரோதி தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
April 12, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கான பிரத்யேக தேர்தல் வாக்குறுதிகளை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் வரும் 13.04.2024 அன்று மாலை 4 மணியளவில் வெளியிடுகிறார்.
April 12, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: கோவை தெற்கு மாவட்டக் கழக அவைத்தலைவர் திரு.N.சிவக்குமார் அவர்கள் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
April 10, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், பட்டுக்கோட்டை நகரக் கழக செயலாளர் திரு.V.M.பாண்டியராஜன் அவர்களின் தாயார் திருமதி. V. M. மாயம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
April 10, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஈகைத் திருநாளான ரமலான் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ரமலான் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.