September 1, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தென்காசி வடக்கு மாவட்டம் – கடையநல்லூர் ஒன்றிய கழகம், கழக அமைப்பு ரீதியாக “கடையநல்லூர் வடக்கு ஒன்றியம்”, “கடையநல்லூர் தெற்கு ஒன்றியம்” என இரண்டு ஒன்றியக் கழகங்களாகப் பிரிக்கப்பட்டு ஒன்றியக் கழக செயலாளர்கள் நியமனம்.
September 1, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருநெல்வேலி புறநகர் மேற்கு மாவட்டம் – திருநெல்வேலி புறநகர் மேற்கு மாவட்டக் கழக இணைச்செயலாளர் நியமனம்.
September 1, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தூத்துக்குடி வடக்கு மாவட்டம் – தூத்துக்குடி மேற்கு ஒன்றியக் கழக செயலாளர் நியமனம்.
September 1, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தன் கடைசி மூச்சு வரை தாய்நாட்டிற்காக போரிட்டு ஒட்டுமொத்த தேசத்திற்கே விடுதலைப்போரில் வழிகாட்டியாக திகழ்ந்த #மாமன்னர்_பூலித்தேவன் அவர்களின் ஜெயந்தி விழாவான இன்று நெல்கட்டான் செவல் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
August 31, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை வழங்க மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசையும், காவிரி விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் மக்கள் விரோத தி.மு.க. அரசையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் கண்டன உரையாற்றுகிறார்!
August 31, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்நாட்டில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த உள்ள சுங்க கட்டண உயர்வுக்கான அறிவிப்பை திரும்ப பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
August 30, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசின் செயல் நீதிக்கு புறம்பானது, கடும் கண்டனத்திற்குரியது.
August 30, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சகோதர, சகோதரிகளுக்கு இடையே ஆழமாக வேரூன்றிய அன்பு மற்றும் மரியாதையின் வெளிப்பாட்டை உணர்த்தும் ரக்ஷா பந்தன் தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் எனது நல்வாழ்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரத்துவத்தை போற்றும் வகையில் ரக்ஷா பந்தன் கொண்டாடும் இந்நாளில், அனைத்து பெண்களின் பெருமையை நிலைநாட்டவும், அவர்களுக்கான பாதுகாப்பான சூழலை உறுதி செய்யவும் நாம் அனைவரும் உறுதியேற்போம்.
August 28, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதல் பிரிவில் வென்று இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கம் பெற்றுத் தந்திருக்கும் நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிய விளையாட்டு, காமன்வெல்த், ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்று சாதனை படைத்ததோடு உலக அளவிலும் தங்கம் வென்று நீரஜ் சோப்ரா தனக்கென தனி முத்திரையை பதித்திருக்கிறார். விரைவில் நடைபெற உள்ள பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றிருக்கும் நீரஜ் சோப்ரா அங்கும் தங்கம் வென்று வரலாறு படைக்கவும் இந்தியாவுக்கு தொடர்ந்து பெருமை சேர்க்கவும் மனமார வாழ்த்துகிறேன்.
August 28, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மகிழ்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் அடையாளமாக திகழும் அறுவடைத் திருநாளான பொன் ஓணம் பண்டிகையை கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.