கழகம்
உருவாக்கம்
தலைமைக் கழக நிர்வாகிகள்
கழக மாவட்டங்கள்
கழக அணிகள்
தேர்தல் அறிக்கைகள்
மக்கள் பிரதிநிதிகள்
தலைமை
போராட்டங்கள்
வெளியீடுகள்
பொதுச்செயலாளர் அறிக்கைகள்
தலைமைக் கழக அறிவிப்புகள்
கழக நிர்வாகிகள் நியமனம்
ஊடகம்
சிறப்பு நேர்காணல்கள்
செய்தியாளர் சந்திப்பு
பொதுச்செயலாளர் நிகழ்ச்சி காணொளி
தொடர்பு கொள்ள
சமீபத்திய செய்தி
மக்களைப் பற்றியே சிந்தித்து மக்களுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த சுதந்திரப் போராட்ட வீரரும், இந்தியாவின் தலைசிறந்த அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான திரு.கக்கன் அவர்களின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மதுரை மாவட்டம், மேலூர் தும்பைப்பட்டியில் அமைந்துள்ள தியாகச்சீலர் திரு.கக்கன் அவர்களின் மணிமண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
மக்களைப் பற்றியே சிந்தித்து மக்களுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த சுதந்திரப் போராட்ட வீரரும், இந்தியாவின் தலைசிறந்த அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான திரு. கக்கன் அவர்களின் நினைவு தினம் இன்று. பொதுவாழ்க்கையில் நேர்மையாகவும், எளிமையாகவும் இருக்க வேண்டும் என்பதையே இறுதிவரை கொள்கையாகவே கொண்டிருந்த திரு. கக்கன் அவர்கள் நாட்டுக்காக ஆற்றிய பணிகளை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
“உழவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது” என்ற வரிகளுக்கு ஏற்ப வரவு – செலவு பார்க்காமல் உழுவதையும், உழைப்பதையுமே தன் வாழ்நாள் பணியாக கொண்டிருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் எனது தேசிய விவசாயிகள் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மழை, புயல், வெள்ளம், வறட்சி என எத்துனை பேரிடர்களை சந்தித்தாலும் தங்களின் கடின உழைப்பின் மூலம் உலகிற்கே உணவளிக்கும் மகத்தான சேவையில் இடைவிடாது ஈடுபட்டுவரும் விவசாயப் பெருமக்கள் அனைவரையும் இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.
ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்டம்: திண்டுக்கல் மாவட்டம் மறுசீரமைப்பு; மாவட்டக் கழக செயலாளர்கள் நியமனம்.
கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி.தினகரன் அவர்கள் திருவண்ணாமலையில் இன்று, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், மருத்துவர் அய்யா திரு.ராமதாஸ் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் !
திருநெல்வேலியில் நீதிமன்ற வாசலில் வாலிபர் ஒருவர் வெட்டி படுகொலை – தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டின் சாட்சி! திருநெல்வேலியில் நீதிமன்ற வாசலில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தும் வாலிபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நீதிமன்ற கதவுகளை இழுத்து மூடி வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது தொடர்கதையாகிவிட்டது. இதற்கு திமுக அரசின் நிர்வாகத் தோல்வியும், காவல் துறையினர் சுதந்திரமாக செயல்பட முடியாத சூழலுமே காரணம் என்று மக்கள் உரத்தக் குரலில் சொல்ல தொடங்கி விட்டனர் . விடியலை தருவோம் என்று சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சியை கைப்பற்றிய திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய காவல்துறையைக் கூட முறையாக கையாள முடியவில்லை என்பதும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதும் தினம் தினம் நிரூபணமாகிவருகிறது. இந்நிலையில் மீதமிருக்கும் சில மாதங்களாவது தமிழக மக்களின் மீது உண்மையான அக்கறையுடன் செயல்பட்டு அவர்களது உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு தரக்கூடிய ஒரு அரசாக தமிழக அரசு இருந்திடவும்; தொடர்ந்து இதுபோல கொலை கொள்ளை சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்கவேண்டும் எனவும் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
வடசென்னை மக்களின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் அழிக்கும் திட்டங்களை ஒருபோதும் ஏற்க முடியாது – எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் சார்பாக சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் வரும் 20 ஆம் தேதி நடைபெறும் என தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. லட்சக்கணக்கான பொதுமக்கள் அடர்த்தியாக வசிக்கக் கூடிய வடசென்னையில் ஏற்கனவே 3330 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் பல்வேறு அனல் மின் நிலையங்கள் இயங்கிவரும் நிலையில், தற்போது கூடுதலாக 660 மெகாவாட் அளவிற்கான அனல்மின் நிலையத்தை அமைக்க முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது. எண்ணூர் மற்றும் மணலி ஆகிய இரண்டு இடங்களில் மட்டும் அனல் மின் நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், ரசாயன ஆலைகள் என அபாயகரமான தொழிற்சாலைகள் பயன்பாட்டில் இருக்கும் வடசென்னையில் மேலும் ஒரு அனல் மின் நிலையத்தை அமைத்தால் அப்பகுதி முழுவதும் பொதுமக்கள் வாழத் தகுதியற்ற இடமாக மாறிவிடும் என சுற்றுச்சூழல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வடசென்னையில் ஏற்கனவே செயல்பட்டு வரும் அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகளால் பக்கிங்காம், கொசஸ்தலை மற்றும் எண்ணூர் முகத்துவாரம் ஆகிய நீர்நிலைப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க ஆய்வறிக்கையின் அடிப்படையில் தற்போது பொதுமக்களிடம் கருத்துக் கேட்பது அவர்களை முழுக்க முழுக்க ஏமாற்றும் செயலாகும். எனவே, வடசென்னைப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதோடு, இயற்கை வளங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை உடனடியாக ரத்து செய்வதோடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றலை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
கழக நிர்வாகிகள் நியமனம்
தேதி / நாள்
கழக நிர்வாகிகள் நியமனம்
விவரங்கள் பதிவிறக்கம் செய்ய
கழகம்
உருவாக்கம்
தலைமைக் கழக நிர்வாகிகள்
கழக மாவட்டங்கள்
கழக அணிகள்
மக்கள் பிரதிநிதிகள்
Facebook
Twitter
Youtube
தலைமை
டிடிவி தினகரன்
வெளியீடுகள்
பொதுச்செயலாளர் அறிக்கைகள்
தலைமைக் கழக அறிவிப்புகள்
கழக நிர்வாகிகள் நியமனம்
ஊடகம்
சிறப்பு நேர்காணல்கள்
செய்தியாளர் சந்திப்பு
பொதுச்செயலாளர் நிகழ்ச்சி காணொளி
அலுவலகம்
முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
officeofttv@gmail.com
தொடர்பு கொள்ள:
044 – 2848 1235
Copyright © 2024 AMMK. All Rights Reserved.