January 25, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்கா செய்தியாளராக பணியாற்றிவரும் திரு.நேசபிரபு அவர்களை நேற்றிரவு அடையாளம் தெரியாத கும்பல் அரிவாளால் வெட்டி கொலைவெறி தாக்குதல் நடத்தியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த மதுபானக்கடைகள் குறித்த விவரங்களை தொலைக்காட்சி செய்திகளின் மூலமாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற காரணத்திற்காகவே திரு.நேசபிரபு மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை பின் தொடர்வதாக பலமுறை புகார் அளித்த பின்னரும் எவ்வித பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையினரின் அலட்சியப் போக்கால் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பெட்ரோல் பங்கில் வைத்து நேசபிரபு மீது மர்ம நபர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். திமுக ஆட்சிக்குவந்த பின் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொலை, கொள்ளை போன்ற சட்டம், ஒழுங்கு பிரச்னைகளால், பொதுமக்கள் தொடங்கி அரசு அதிகாரிகள், காவலர்கள், பத்திரிகையாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பில்லாத சூழலில் பணியாற்றி வருவதற்கு தற்போது நடந்திருக்கும் தாக்குதல் சம்பவம் கூடுதல் சாட்சியாக அமைந்திருக்கிறது. எனவே, உள்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், இனிமேலாவது சட்டம், ஒழுங்கு பிரச்னையில் கூடுதல் கவனம் செலுத்தி, இது போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதலுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திரு.நேசபிரபு அவர்களுக்கு அரசு சார்பில் உயர்தர சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
January 25, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 புதிய வாக்காளர்களின் சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையிலும், வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் நாடு முழுவதும் தேசிய வாக்காளர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.ஒவ்வொரு தேர்தலிலும் ஜாதி, மதம், இனத்திற்காகவோ, பணம் மற்றும் பொருட்களுக்காகவோ அடிபணியாமல் விலை மதிப்பில்லா வாக்கினை நேர்மையுடன் செலுத்தி ஜனநாயக கடமையாற்ற நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
January 24, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 மத்திய சென்னை மேற்கு மாவட்டம் : மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் வட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்
January 24, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 மத்திய சென்னை மேற்கு மாவட்டம் : அண்ணா நகர் பகுதி பிரிப்பு
January 24, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 விழுப்புரம் கிழக்கு மாவட்டம் : மாவட்டக் கழக துணைச்செயலாளர், மாவட்ட விவசாயப் பிரிவு தலைவர் நியமனம்
January 24, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம் : மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், தியாகதுருகம் பேரூர் கழக செயலாளர் நியமனம்
January 24, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் : மாவட்ட மாணவர் அணி செயலாளர் நியமனம்
January 24, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் : மாவட்டக் கழக பொருளாளர், மாவட்ட மாணவர் அணி, மாவட்ட வெளிநாடுவாழ் தமிழர் நலப்பிரிவு செயலாளர்கள் நியமனம்
January 24, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 புதுக்கோட்டை மத்தியம் மாவட்டம் : மாவட்ட பொறியாளர் அணி நிர்வாகிகள், பொன்னமராவதி தெற்கு, அரிமளம் வடக்கு ஒன்றிய ஊராட்சி கழக செயலாளர்கள் நியமனம்
January 24, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 மதுரை மாநகர் வடக்கு மாவட்டம் : மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், பகுதிக்குட்பட்ட வட்ட கழக நிர்வாகிகள், பகுதிக்குட்பட்ட சார்பு அணி நிர்வாகிகள் நியமனம்