September 26, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தென்காசி வடக்கு மாவட்டம்: குருவிகுளம் வடக்கு மற்றும் குருவிகுளம் தெற்கு ஆகிய ஒன்றியக் கழகங்களின் பணிகளை விரைந்து ஆற்றுவதற்கு ஏதுவாக கழக அமைப்பு ரீதியாக “குருவிகுளம் கிழக்கு ஒன்றியம்”, “குருவிகுளம் வடக்கு ஒன்றியம்” மற்றும் “குருவிகுளம் தெற்கு ஒன்றியம்” என மூன்று ஒன்றிய கழகங்களாக மறுசீரமைக்கப்படுகிறது
September 16, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 புதுச்சேரி மேற்கு மாநிலக் கழக நிர்வாகிகள் மற்றும் மாநில சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
September 16, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 புதுச்சேரி மேற்கு மாநிலக் கழக துணைச்செயலாளராகவும், தகவல்நுட்ப ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவு சார்பு அணிகளின் செயலாளர்களாகவும், மாநில தொகுதிக் கழக செயலாளர்களாகவும் மற்றும் காரைக்கால் மாவட்டக் கழக நிர்வாகிகளாகவும், காரைக்கால் மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்களாகவும், காரைக்கால் நகரக் கழக நிர்வாகிகளாகவும், காரைக்கால் மாவட்ட தொகுதிக் கழக செயலாளர்களாகவும் நிர்வாகிகள் நியமனம்.
September 27, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக செய்தி வெளியீடு: 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம்; கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், கழக நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
September 27, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஆஸ்திரேலியாவுக்கு கடத்தவிருந்த ரூ.110 கோடி மதிப்பிலான போதைப் பொருள் சென்னை துறைமுகத்தில் பறிமுதல் – சர்வதேச போதைப் பொருள் கடத்தலின் தலைநகரமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. சென்னை துறைமுகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்தவிருந்த ரூ.110 கோடி மதிப்பிலான கொடிய வகை போதைப்பொருள் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரிடம் மேற்கொண்ட விசாரணையில், ஏற்கனவே நான்குமுறை ஆஸ்திரேலியாவிற்கு போதைப்பொருள் கடத்தியிருப்பதும், இந்த கடத்தலுக்கும் சர்வதேச கும்பலுக்கும் தொடர்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. போதை ஊசி, மாத்திரை, சாக்லேட் என பல்வேறு வடிவங்களில் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் போதைப் பொருட்களின் புழக்கத்தை பல முறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் அலட்சியப் போக்கால் சர்வதேச போதைப் பொருள் கடத்தலின் தலைநகரமாக தமிழகம் மாறும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, இனியும் அலட்சியம் காட்டாமல் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடங்கி இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை அடியோடு தடுத்து நிறுத்துவதோடு, இதுபோன்று கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
September 27, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக செய்தி வெளியீடு: தமிழர் தந்தை திரு.சி.பா.ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாள்; கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
September 27, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பத்திரிகை உலகில் புதிய புரட்சிக்கு அடித்தளமிட்டவரும், தினத்தந்தி நாளிதழை தொடங்கியவருமான தமிழர் தந்தை திரு.சி.பா.ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாள் இன்று. உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என முழங்கியதோடு, அவற்றையே வாழ்க்கையின் நோக்கமாக கொண்டு தமிழுக்கும், தமிழக மக்களின் உயர்வுக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த திரு.சி.பா.ஆதித்தனார் அவர்களின் அரும்பணிகளை அவர் பிறந்த இந்நாளில் போற்றி கொண்டாடுவோம்.
September 26, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கழக இதயதெய்வம் அம்மா தொழிற்சங்கப் பேரவை: மின்வாரிய தொழிலாளர்கள்–நிர்வாக பணியாளர்கள் இதயதெய்வம் அம்மா தொழிற்சங்க நிர்வாகிகள் நியமனம்
September 26, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கழக இதயதெய்வம் அம்மா தொழிற்சங்கப் பேரவை: தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மத்திய சங்க பொருளாளர் நியமனம்.
September 26, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 வேலூர் புறநகர் மாவட்டம் : கீழ்வைத்தியனான் குப்பம் மற்றும் குடியாத்தம் சட்டமன்றத்தொகுதி பொதுக்குழு உறுப்பினர்கள், பேர்ணாம்பட்டு நகரக் கழக செயலாளர் நியமனம்