September 8, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திரைப்பட இயக்குனரும் பிரபல நடிகருமான திரு. மாரிமுத்து அவர்கள் மரணமடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது. திரைப்படங்கள் மட்டுமல்லாது தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து, உணர்ச்சிகரமான வசனங்கள் மூலமாக தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய திரு.மாரிமுத்துவின் திடீர் மரணம் திரைத்துறைக்கும் அவரின் ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும். திரு.மாரிமுத்து அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
September 7, 2023 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 115 வது பிறந்தநாள் விழாவையொட்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழக மாவட்டங்கள் வாரியாக செப்டம்பர் 15, 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது. செப்டம்பர் 15 அன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் கலந்துகொண்டு எழுச்சி பேருரையாற்றவுள்ளார்.
September 1, 2023 In ticker 0 01.09.2023 நிர்வாகிகள் நியமனம் – செங்கல்பட்டு தெற்கு, விழுப்புரம் கிழக்கு, புதுக்கோட்டை மத்தியம், புதுக்கோட்டை தெற்கு , மதுரை புறநகர் தெற்கு, விருதுநகர் கிழக்கு, விருதநகர் மத்தியம், தென்காசி வடக்கு, திருநெல்வேலி புறநகர் மேற்கு மற்றும் தூத்துக்குடி வடக்கு ஆகிய கழக மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் நியமனம்.
August 24, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சந்திராயன்-3 விண்கலம் தொடர்பான செய்தி சேகரிக்க திருவனந்தபுரம் சென்று நெல்லைக்கு திரும்பும் வழியில் நாங்குநேரியில் ஏற்பட்ட சாலை விபத்தில் புதிய தலைமுறை நெல்லை மாவட்ட ஒளிப்பதிவாளர் சங்கர் உயிரிழந்த செய்தி வேதனை தருகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதே விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தியாளர் நாகராஜன் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் வள்ளிநாயகம், நாராயணன் ஆகியோர் விரைவில் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
August 23, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14 ஆம் தேதி LVM ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3 விண்கலம் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இந்தியரின் கனவுகளுக்கு செயல்வடிவம் கொடுக்க இரவு பகல் பாராமல், அர்ப்பணிப்புடன் அயராது உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். சந்திரயான்- 3 விண்கலத்தின் திட்ட இயக்குனராக தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி வீரமுத்துவேல் பணியாற்றியிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது. உலக நாடுகள் பல முயற்சி செய்தும் நெருங்க முடியாத நிலவின் தென் துருவத்தை சந்திரயான்-3 அடைந்திருக்கும் இந்த நாள் இந்திய விண்வெளி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும்.
August 20, 2023 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக செய்தி வெளியீடு: மாவீரர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவு தினம் – கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
August 20, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அந்நியர்கள்களிடம் அடிமையாய் இருந்து வாழ்வதை விட சண்டையிட்டு சாவது மேல் என வீரப்போர் புரிந்த மாமன்னர் பூலித்தேவனின் முதன்மை படைத்தளபதி மாவீரர் ஒண்டிவீரனின் நினைவு நாள் இன்று. தன் நாட்டின் விடுதலைக்காக தனது கடைசி மூச்சுவரை களத்தில் நின்று ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு உயிர்நீத்த மாவீரர் ஒண்டிவீரனின் தியாகத்தையும் வீரத்தையும் போற்றி வணங்கிடுவோம்.
August 14, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்திய மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
August 11, 2023 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட செயல்வீரர்கள் மற்றும் செயல்வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் – கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது.
August 11, 2023 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக செய்தி வெளியீடு: பா.ராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாள் – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.