December 5, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஒவ்வொரு கணமும் எங்களை வழி நடத்திக்கொண்டிருக்கும் இதயதெய்வம் அம்மா அவர்களுக்கு கழகத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தினோம்.
December 3, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கடவுளின் குழந்தைகளான மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்! – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன்.
December 2, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நியூசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியின் வலுதூக்கும் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ள செல்வி.லோகப்பிரியாவை மனதாரப் பாராட்டுகிறேன். – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன்.
November 29, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஏழை, எளிய மக்களின் பசி தீர்ப்பதற்காக இதயதெய்வம் அம்மா அவர்கள் கொண்டுவந்த, அம்மா உணவகங்களை மூடுவதற்கான ஏற்பாடுகளை தி.மு.க அரசு தொடர்ந்து செய்துவருவது கண்டனத்திற்குரியது. அம்மா உணவகங்களால் நஷ்டம் ஏற்படுவதாக சென்னை மாநகராட்சி கணக்கு நிலைக்குழு அறிக்கை கொடுத்திருப்பதும் அதன் ஓர் அங்கம்தான். அம்மா உணவகங்களை தொடர்ந்து நடத்துவோம் என்று மேயர் சொன்னாலும் அந்த உணவகங்களை எப்படி அவர்கள் சீரழித்து வருகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஏழை மக்கள் பசியாறுவதைத் தடுக்க நினைத்தால் மக்கள் அதற்கான பாடத்தை தி.மு.க.விற்கு புகட்டுவார்கள்.
November 26, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திருவாரூர் மாவட்டத்தில் அ.ம.மு.க.வைச் சேர்ந்தவர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்களாக உள்ள ஊர்களில் அடிப்படையான திட்டங்களைக்கூட செயல்படுத்தவிடாமல் தடுக்கும் தி.மு.க அரசுக்கு கடும் கண்டனம்.-கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன்
September 5, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அறப்பணியாம் ஆசிரியர் பணியில் தங்களை அர்ப்பணித்துக்கொண்டுள்ள ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்!
November 25, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இதயதெய்வம் அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களுக்கு அறிஞர் அண்ணாவின் பொன்மொழியை நினைவுபடுத்துகிறேன். தரம் தாழ்ந்த தனிப்பட்ட விமர்சனங்களைக் கையாள்வது எப்படி ?
November 22, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 முதுபெரும் தமிழறிஞர் பத்மஸ்ரீ முனைவர் ஒளவை நடராசன் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் நன்மதிப்பைப் பெற்றிருந்த திரு.நடராசன் அவர்கள், ஆற்றிய தமிழ்ப் பணிகள் என்றும் நிலைத்திருக்கும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
November 18, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தேசத்தின் மானம் காக்க ஆங்கிலேயருக்கு எதிராக கப்பலோட்டி, தன் சொத்து சுகங்களை இழந்து, சிறையில் வாடிய செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவு நாள் இன்று! அந்த வீரத்திருமகனின் தியாகத்தை, தேச பக்தியை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
November 16, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஜனநாயகம் ஆரோக்கியமாக இருப்பதில் முக்கியப் பங்காற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கு தேசிய பத்திரிகையாளர் தினத்தில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மற்ற துறையில் இருப்பவர்களைப் போலவே ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களின் நலன்களைப் பேணிப் பாதுகாத்திடுவது அவசியமாகும். அதற்கு வழிகாட்டும் வகையில் தேசிய பத்திரிகையாளர் தினம் அமையட்டும்.