May 24, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கழகத்தின் செயற்குழு கூட்டம்: வருகின்ற ஜூன் 7ஆம் தேதி சென்னை, தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெறுகிறது.
May 24, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 எளிய மக்களுக்கான இதழியல் என்ற கருத்தாக்கத்தில் தமிழர்களுக்காக தினத்தந்தி நாளிதழைத் தொடங்கி அதில் வெற்றிகண்ட மாமனிதர்; தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் மறைந்த திரு.சி.பா.ஆதித்தனார் அவர்களின் நினைவு தினம் இன்று. புகழ்மிக்க குடும்பத்தில் பிறந்து, தந்தை பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, தமிழ் இதழியல் உலகில் நீங்கா இடம் பிடித்து முடிசூடா மன்னராகத் திகழ்ந்த சி.பா.ஆதித்தனார் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும். சி.பா.ஆதித்தனார் அவர்களின் நினைவு நாளில் அவரது இதழியல், அரசியல், சமூகப் பணிகளை நினைவுகூர்ந்து போற்றிடுவோம்.
May 23, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னை பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மூன்று முறை போராட்டம் நடத்தியும் தங்களை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்று பகுதி நேர ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரமாக்குவதாக வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிக்கு வந்தவுடன் வழக்கம்போல அதை மறந்து விட்டு ஆசிரியர் சமுதாயத்தை பல வகைகளில் வஞ்சித்து வருவதை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கின்றது. எனவே, பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகின்றேன்.
May 23, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சிறந்த கல்வியாளரும், ஆன்மீகவாதியும், பாரம்பரியமிக்க மதுரை தியாகராஜர் கல்வி நிறுவனங்களின் தாளாளருமான திரு.கருமுத்து கண்ணன் மறைந்தார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது. மறைந்த மாண்புமிகு இதயதெய்வம் அம்மா அவர்களின் அன்பைப் பெற்ற திரு.கருமுத்து கண்ணன் அவர்கள் அறநிலையத்துறை உள்ளிட்ட அரசின் துறைகளில் கவுரவப்பதவிகளை வகித்ததோடு, கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களில் குறிப்பிடத்தக்கவராக திகழ்ந்தார். திரு.கருமுத்து கண்ணன் மறைவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
May 23, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்நாட்டின் மத்திய பகுதியை ஆட்சி செய்த குறுநில மன்னர்களில் முத்தரையர்கள் வம்ச வழி வந்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழா இன்று.பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் கொடை வள்ளலாகத் திகழ்ந்ததோடு மட்டுமின்றி போர் களத்தில் 14 முறை எதிரிகளை வீழ்த்தி வெற்றி கண்டவர். இரண்டு முறை பல்லவ மன்னர்களின் வெற்றிக்கு துணைநின்று பகைவர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர். பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் பிறந்த நாளான இன்று அவரது வழியில் மக்களுக்காக ஜ
May 22, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்த முதுபெரும் நடிகர் சரத்பாபு காலமானார் என்ற செய்தி வருத்தம் அளிக்கிறது. 1973ஆம் ஆண்டு தெலுங்கு திரை உலகில் அறிமுகம் ஆகி தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் வெளியான 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். நடிகர் திலகம் மறைந்த திரு.சிவாஜி கணேசன் அவர்கள் உள்ளிட்ட பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் அன்பையும், பாராட்டையும் பெற்ற திரு.சரத்பாபு அவர்களின் மறைவு திரையுலகுக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். நடிகர் சரத்பாபு அவர்கள் மறைவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர், ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்.
May 22, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்ததன் நினைவு நாள் இன்று. கடந்த பழனிசாமி ஆட்சியில் நடைபெற்ற இந்த படுபாதக துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும், அதில் அளிக்கப்பட்ட பரிந்துரைகள் மீது தமிழக அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டவர்கள் மீதும், உத்தரவை செயல்படுத்தியவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆவேசமாக கருத்துத் தெரிவித்த முதலமைச்சர், பல மாதங்கள் ஆனபிறகும் நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த 13 பேரின் தியாகங்களை நெஞ்சில் ஏந்தி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் இந்நேரத்தில், துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது மட்டுமே உயிர் நீத்தோரின் தியாகத்துக்கான உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்பதை வலியுறுத்துகிறேன்!
May 19, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி இயல்பானது என்பதைப் புரிந்து கொள்வதுடன், தேர்வில் தோல்வி யடைந்த மாணவர்கள் மீண்டும் துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றேன்.
May 18, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திருச்சி கொள்ளிடம் ஆற்றில் மூன்று சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஸ்ரீமாந் பட்டர் குருகுல வேத பாடசாலையில் பயின்ற மன்னார்குடியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு சிறுவனும் கொள்ளிடம் ஆற்றில் அதிகாலை குளிக்கச் சென்றபோது மூழ்கி உயிரிழந்துள்ளனர். சிறுவர்கள் உயிரிழந்து நான்கு நாட்கள் ஆன பின்பும் அவர்களது குடும்பத்தினருக்கு உள்ளூர் அதிகாரிகளோ, அமைச்சர்களோ நேரில் சென்று ஆறுதல் கூட சொல்லாதது மட்டுமின்றி அவர்களின் குடும்பங்களுக்கு அரசு எவ்வித நிவாரணமும் அளிக்காதது வேதனை அளிக்கிறது. உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு இனியும் தாமதிக்காமல் தமிழக அரசு உடனடியாக நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.
May 18, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 காலமுறை ஊதியத்தில் பணியாற்றிவரும் தற்காலிக அரசு கால்நடை உதவி மருத்துவர்களை பணி நிரந்தரம் செய்க!