December 24, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 36 வது நினைவுநாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
December 24, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இயேசுபிரான் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் பெருநாளாக கொண்டாடி மகிழும் கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
December 24, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கல்வி அறிவு, சுயமரியாதை எண்ணம், பகுத்தறிவு ஆகிய தன்மைகள் மட்டுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும் என்றுரைத்து தன் வாழ்நாள் முழுவதும் சுயமரியாதைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவுதினம் இன்று. சமூகநீதி, பெண்ணுரிமை, சாதி ஒழிப்பு, சமதர்ம சமத்துவ சிந்தனை, என தான் கொண்ட கொள்கைகளில் இறுதிவரை உறுதியாக இருந்ததோடு, தமிழர்களின் அடையாளத்தையும், சுயமரியாதையும் மீட்டெடுத்த தந்தை பெரியாரையும் அவரது சிந்தனைகளையும் எந்நாளும் நினைவில் கொள்வோம்.
December 24, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பேரறிஞர் அண்ணாவின் குணநலன்களை குவியப் பெற்றிருக்கும் மாபெரும் தலைவர், ஏழை, எளிய மக்களுக்கு வாரி வழங்கிய வள்ளல், அடிமட்ட தொண்டனையும் சமமாக பாவிக்கும் புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவுதினம் இன்று. மக்களின் இதயங்களை கோயிலாக்கி அங்கே நிரந்தரமாக குடியிருக்கும் எளிமையின் சிகரம், சரித்திர நாயகர் எம்.ஜி.ஆர் அவர்களின் புகழுக்கு மென்மேலும் பெருமை சேர்க்கும் வகையில் அவரது வழியில் எந்நாளும் பயணிப்போம் என இந்நாளில் உறுதியேற்போம்.
December 23, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இயற்கை பேரிடர், வறட்சி உள்ளிட்ட பல்வேறு விதமான சவாலான சூழலிலும் மனிதனின் அடிப்படைத் தேவையான உணவை உற்பத்தி செய்வதை முதன்மை பணியாக கொண்டிருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தேசிய விவசாயிகள் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.விவசாயத்தில் ஏற்படக்கூடிய சிறிய அளவு மாற்றமும் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியிலும் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து, எக்காலத்திற்கும் உணவளிக்கும் விவசாயிகளையும் விவசாயத்தையும் எந்நாளும் போற்றி வணங்குவோம்.
December 22, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுடன் இருந்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே முதல் பணி; சென்னையில் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் திட்டமிட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து! கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய அன்பு வேண்டுகோள்!
December 21, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கனமழையால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன். கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இடைவிடாமல் பெய்த கனமழையால் வீடுகள் மற்றும் உடமைகளுடன் தங்களின் வாழ்வாதாரத்தையும் இழந்து அம்மாவட்ட மக்கள் தவித்து வருகின்றனர். 3 நாட்களுக்கு மேலாக குடியிருப்புகளுக்குள் தேங்கியிருக்கும் வெள்ள நீர் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து மீண்டு வர பல மாதங்கள் ஆகும் என பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் குடும்ப அட்டைதாரர்களுக்கு அறிவித்திருக்கும் ரூ.6000 நிவாரணத் தொகை, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கிறது. சென்னையை ஒப்பிடும் போது மும்மடங்கு பெய்த மழையால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு சென்னையை போலவே வெள்ள நிவாரண தொகையும் வழங்குவது ஏற்புடையதல்ல. எனவே, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்கள் கனமழையால், இழந்த வாழ்வாதாரத்தை மீட்பதற்கு தேவையான அளவிற்கு வெள்ள நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
December 21, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 2023 ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதை வென்றிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் செல்வி. வைஷாலி, துரோணாச்சாரியார் விருதை வென்றிருக்கும் சதுரங்க பயிற்சியாளர் திரு.ஆர்.பி ரமேஷ், வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருதை வென்றிருக்கும் தமிழக கபடி பயிற்சியாளர் கவிதா செல்வராஜ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பல்வேறு விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் முகமது சமி, கபாடி வீரர் பவன்குமார் ஷெராவத், இறகு பந்தாட்ட வீரர்கள் சிராக் ஷெட்டி, சாத்விக் சாய்ராஜ் உட்பட விருதுகளை வென்றிருக்கும் அனைத்து வீரர்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதோடு விளையாட்டுத்துறையில் மென்மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
December 20, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சிறுகுடி மக்களின் வாழ்வியலை உணர்வுப் பூர்வமாக வெளிப்படுத்தும் “நீர் வழிபடூஉம்” நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் எழுத்தாளர் தேவி பாரதி அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஏழை, எளிய மனிதர்களுக்கு நிகழும் வறுமை, அவர்கள் படும் துயரங்களை கதைகளாகவும் நாவல்களாகவும் தொடர்ச்சியாக வெளிக்கொண்டு வரும் எழுத்தாளர் தேவி பாரதி அவர்கள் மேலும் பல படைப்புகளை உருவாக்க எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
December 19, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இரங்கல் செய்தி: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொருளாளரும், சேலம் மத்திய மாவட்டக் கழக செயலாளருமான வீரபாண்டி திரு.S.K.செல்வம் Ex.MLA அவர்களின் தகப்பனாரும், முன்னாள் ஒன்றிய குழு தலைவருமான திரு.S.குப்புசாமி அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.