June 19, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் அருந்திய நால்வர் உயிரிழப்பு – கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த தவறிய காவல் அதிகாரிகளும் அரசு நிர்வாகமுமே முழு பொறுப்பேற்க வேண்டும். கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் அருந்தியதால் நான்கு பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வரும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. கடந்த ஆண்டு விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 20க்கும் அதிகமானோர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த பிறகும், கள்ளச்சாராயத்தை ஒழிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திறனற்ற திமுக அரசால் உயிரிழப்புச் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. ஒவ்வொரு முறை ஏற்படும் கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு பிறகும், அரசு நிர்வாகத்தின் தவறுகளை மறைக்க, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம், காவல் உயர் அதிகாரிகள் இடமாற்றம், கள்ளச்சாராயத்தை ஒழிக்க அதிரடி சோதனை எனும் கபட நாடகத்தை வாடிக்கையாக கொண்டிருக்கும் திறனற்ற திமுக அரசின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது. எனவே, இம்முறையும் அரசு நிர்வாகத்தின் தவறை மறைக்க காரணம் தேடாமல், ஊழல் மற்றும் முறைகேடு புகார், கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களின் வரிசையில் இணைந்திருக்கும் கள்ளச்சாராய விற்பனையையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை இனியாவது மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
June 18, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் திருமதி. சாருபாலா தொண்டைமான் அவர்களின் மகன் திரு.பிரித்விராஜ் தொண்டைமான் அவர்கள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஆடவர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் தேர்வாகியிருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பதக்கங்களை குவித்து சாதனை படைத்திருக்கும் திரு. பிரித்விராஜ் தொண்டைமான் அவர்கள், பாரீஸ் ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வென்று தாய்நாட்டிற்கு மென்மேலும் பெருமை சேர்க்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
June 18, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நியாய விலைக்கடைகளில் நிலவும் பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பாதிப்பு – ஏழை, எளிய மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு மற்றும் விநியோகத்தை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
June 18, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 போக்குவரத்துத் துறையை தனியாருக்கு தாரைவார்க்கும் தமிழக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது – போக்குவரத்துக் கழகங்களில் தனியார் நிறுவனங்களின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும்.
June 18, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 வெளிமாநில பதிவெண் கொண்ட தனியார் ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் மறுபதிவு செய்ய வழங்கப்பட்ட கால அவகாசத்தை மேலும் மூன்று மாத காலத்திற்கு நீட்டிக்க வேண்டும் – பொதுமக்களின் பயண சேவையை கருத்தில் கொண்டு அப்பேருந்துகள் தொடந்து இயங்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.
June 18, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழகத்தை பாலைவனமாக்கும் மேகதாது அணை குறித்து பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமளிக்கக் கூடாது – அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் கர்நாடகா ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.
June 18, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தை விட்டு வெளியேறும் பரந்தூர் பகுதி மக்கள் – சொந்த மாநில மக்களை அகதிகளாக்கும் தமிழக அரசின் பிடிவாதப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
June 17, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் அன்புச் சகோதரர் திரு.கோபி கிருஷ்ணா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கழகத்தின் மீது அளப்பரிய பற்று கொண்ட திரு.கோபி கிருஷ்ணா அவர்கள், திரையுலகில் தொடர் சாதனை படைப்பதோடு, தான் தலைமை ஏற்றிருக்கும் தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்கத்தையும் வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வாழ்த்தி மகிழ்கிறேன்.
June 17, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 புதுக்கோட்டை அருகே மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற வருவாய் கோட்டாட்சியர் மீது லாரியை ஏற்றி கொல்ல முயற்சி – கடுமையான நடவடிக்கையின் மூலம் சட்டவிரோத மணல் கடத்தலுக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனைக்குச் சென்ற வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி அவர்கள் மீது லாரியை ஏற்றி கொல்ல முயற்சி செய்யப்பட்டதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு அதிகரித்து வரும் மணல் கொள்ளைகளும், அதனை தடுக்க முயற்சிக்கும் அரசு அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவங்களும் தொடர்கதையாகி வருவது கடும் கண்டனத்திற்குரியது. மணல் கடத்தலை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் திரு.லூர்து பிரான்சிஸ் அவர்களின் படுகொலைக்கு பின்பும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசின் அலட்சியப் போக்கே அரசு அதிகாரிகளின் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. எனவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மணல் கொள்ளைச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அரசு அதிகாரிகள் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் பணியாற்றுவதற்கான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
June 17, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சுதந்திர போராட்டத் தியாகி வ.உ.சிதம்பரனார் அவர்களை சிறையில் தள்ளிய ஆங்கிலேய அதிகாரி ஆஷ் துரையை சுட்டுக் கொன்றதோடு, தாய் திருநாட்டிற்காக தன்னுயிரையும் அர்ப்பணித்த மாவீரர் வாஞ்சிநாதன் அவர்களின் நினைவுதினம் இன்று… இளம் வயதிலேயே தான் கொண்ட லட்சியத்திற்காக தனக்குத் தானே முடிவுரை எழுதி, மக்களிடம் உறங்கிக் கொண்டிருந்த சுதந்திர வேட்கையை தட்டி எழுப்பிய புரட்சியாளர் வாஞ்சிநாதன் அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் எந்நாளும் நினைவில் வைத்து போற்றுவோம்…