February 9, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த மூவர் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய முக்கியமான சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி ஆளுநர் மாளிகை அரசுக்கு திருப்பி அனுப்புவதும், விளக்கம் கொடுத்த பின்னும் பலமாதங்களாக சட்டங்கள் கிடப்பில் போட்டிருப்பதுமாக நடவடிக்கைகள் உள்ளன. இப்போது மேலும் மூன்று பேர் உயிரிழப்பது வரை தாமதம் நேர்ந்திருப்பது வேதனை அளிக்கிறது. எனவே, இனிமேலும் தாமதிக்காது ஆன்லைன் ரம்மி சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
February 9, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தம்பி அவர்கள் எத்தனை இழிமொழி உமிழ்ந்திடினும் ! நாம் நம் தரம் குறையாமல் சொல்லையும் செயலையும் அமைத்துக்கொள்ள வேண்டும். எருமைகள் சேற்றில் புரளும் – அதனை கண்டும் ஆறறிவினர் அருவியில்தான் நீராடுகின்றனர். கழுகு அழுகிய பிணத்தைக் கொத்தித் தின்கிறது ! ஆனால் கிளி கொவ்வைக் கணியைத்தான் விரும்புகிறது ! புளித்த காடியைப் பருகுவான் குடிகாரன் ; செவ்விளநீர் தேடுகிறான் பண்பாளன் . எவர் எத்தகைய இழிமொழி பேசிடிடினும் தம்பி. நீ காணம் பாடிடும் வானம்பாடியாகவே இருந்திடல் வேண்டும். பண்பு மறந்து கண்ணியமற்று காழ்ப்புக் காரணமாக என்னென்ன இழிமொழி பேசுகின்றனர் என்பதை எண்ணிடும்போது தம்பி ! நாம் மேற்கொண்டுள்ள காரியத்தில் வெற்றி கிடைத்திட மேலும் உறுதியும் ஊக்கமும் பெற்றுக் கொள்ள வேண்டும் யாராரோ வீசிடும் இழிமொழிகளை பழிச்சொற்களை எல்லாம் கேட்டுக்கொண்டுதான் ஆகவேண்டுமா அண்ணா ! என்று கேட்டால் தம்பி தயக்கமின்றி சொல்லுவேன் கேட்டுக்கொள்ளத்தான் வேண்டும் ! நாட்டுக்கு நல்லாட்சி அமைத்திட நாம் இந்த விலை கொடுத்தாக வேண்டும் – பேரறிஞர் அண்ணா
February 7, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நொடிப்பொழுதும் தாமதிக்காமல் களமிறங்கிய கழக கண்மணிகளுக்கு இதய நன்றிகள் !
February 7, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்படாத காரணத்தினால், இடைத்தேர்தலில் கழகம் போட்டியில்லை.
February 6, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த மூன்று லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் நெற்பயிர்கள் எதிர்பாராமல் பெய்த மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவினர் ஒரே நாளில் அரைகுறையாக பார்வையிட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்திருக்கின்றனர். 33 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் சேதத்துக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என திமுக அரசு கூறியுள்ளது. உரிய மதிப்பீடு செய்யாமல் இழப்பீடு தொகையை அறிவித்திருப்பது ஏற்கதக்கதல்ல. ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனும் விவசாயிகள் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.
February 5, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழகத்தின் பெரும்பகுதியை அந்நிய படையெடுப்புகளில் இருந்து காத்தவரும், மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் சிறந்து விளங்கியவருமான மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்தநாள் இன்று! மக்களை நேசித்து, அவர்களின் வளர்ச்சிக்காக பாடுபட்ட திருமலை நாயக்கர் அவர்களின் பிறந்த நாளில் அவரது வழித்தோன்றல்களையும், மக்களையும் வாழ்த்துவது மட்டுமின்றி, அவரின் ஆட்சிமுறையை நினைவு கூர்ந்து வணங்கிடுவோம்.
February 4, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் தனியார் ஒருவர் நடத்திய நிகழ்வில் இலவச வேஷ்டி சேலை பெறுவதற்காக டோக்கன் வாங்க குவிந்த பெண்களில் 4 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. முன்அனுமதி பெற்று நிகழ்வு நடந்தபோதிலும் காவல்துறையினர் அதிக அளவு கூட்டம் குவிந்ததை கட்டுப்படுத்த தவறியது கண்டிக்கத்தக்கது. உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அலட்சியமாக செயல்பட்ட காவல்துறையினர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
February 4, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 வசீகரிக்கும் குரலால் தமிழர்களின் மனதைக் கட்டிப் போட்ட பிரபலப் பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நடித்த திரைப்படங்களில் பாடி சிறப்பு சேர்த்தவர். அண்மையில் அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உற்றார் உறவினர் மற்றும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
February 3, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஈரோடு (கிழக்கு)-98 சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தல் : அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தேர்தல் பணிக்குழு கூடுதல் பொறுப்பாளர்கள் அறிவிப்பு
February 3, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்நாட்டை தலைநிமிர வைத்த தங்கத்தலைவர், தமிழ்த்தாயின் தவப்புதல்வர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு தினம் இன்று! ஆற்றல்மிக்க எழுத்தாலும், பேச்சாலும், செயல்பாடுகளாலும் சமூக நீதி, மாநில உரிமை, மொழி கொள்கை என தமிழகத்தின் அனைத்து நலன்களையும் காத்து நின்ற அப்பெருமகனாரின் அரும்பணிகளைப் போற்றி வணங்கிடுவோம்.