January 20, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்- அம்மா மக்கள் முன்னேற்றக் கழக விருதுநகர் மத்தியம், விருதுநகர் கிழக்கு மற்றும் விருதுநகர் மேற்கு ஆகிய கழக மாவட்டங்களுக்குட்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் வருகிற 25.01.2025, சனிக்கிழமை அன்று காலை 10 மணியளவில் விருதுநகர் மாவட்டம் பாரதி நகரில் அமைந்துள்ள சோலை ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விருதுநகர் மத்தியம், விருதுநகர் கிழக்கு மற்றும் விருதுநகர் மேற்கு ஆகிய கழக மாவட்டங்களைச் சார்ந்த அனைத்து நிலையிலான கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
January 19, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: செங்கல்பட்டு மத்திய மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை மற்றும் இளைஞர் பாசறை ஆகிய சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
January 19, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: திருவள்ளூர் மேற்கு மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் திருவாலங்காடு கிழக்கு ஒன்றியக் கழக நிர்வாகிகள் நியமனம்:
January 19, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: தாய்மொழி தமிழுக்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் மொழி ஆதிக்கத்தை தீரத்துடன் எதிர்த்து தன்னுயிர் நீத்த தியாகத் தீபங்களான மொழிப்போர் தியாகிகளுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் 25.01.2025 (சனிக்கிழமை) அன்று தமிழகம் முழுவதும் வீரவணக்கம் செலுத்திடுவோம். தமிழகத்திலுள்ள அனைத்து கழக மாவட்டங்களிலும் மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு மலரஞ்சலி செலுத்திடுவதோடு, அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் பொதுக்கூட்டத்தை மாவட்டக் கழகச் செயலாளர்களுடன், மாணவர் மற்றும் மாணவியர்அணி நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
January 17, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாள்: புதுச்சேரி மாநிலம் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவச்சிலைக்கு கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மரியாதை செலுத்தினார்கள்!
January 17, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 உலகிலேயே தொண்டர்களின் விருப்பத்திற்காகவும், ஏழை, எளிய மக்களின் நல்வாழ்வுக்காகவும் ஒரு இயக்கத்தை தொடங்கி, தான் உயிரோடு இருக்கும் வரை அந்த இயக்கத்தை ஆட்சி பீடத்தில் அமர வைத்திருந்த புரட்சித் தலைவர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த தினம் இன்று… தர்மத்தாயின் தலை மகனாக, தமிழ்நாட்டின் ஒளி விளக்காக, பாமர மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக, நாடி வருவோரின் வறுமையை போக்கும் வள்ளலாக திகழ்ந்த மக்கள் திலகம் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் வழியில் தொடர்ந்து பயணிக்க இந்நாளில் உறுதியேற்போம்.
January 12, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாள்: புதுச்சேரி மாநிலம் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவச்சிலைக்கு கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மரியாதை செலுத்துகிறார்கள்! கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அன்றைய தினம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவப்படத்தை வைத்து மரியாதை செலுத்தி ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிடுமாறும் அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
January 11, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக செய்தி வெளியீடு: கொடி காத்த குமரன் அவர்களின் நினைவு நாளையொட்டி அன்னாரது திருவுருவச்சிலைக்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
January 9, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்; கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் வருகிற 12.01.2025, ஞாயிறுக்கிழமை மாலை 4 மணியளவில் திருநெல்வேலி KTC நகர், காப்பர் லீஃப் ஹோட்டல் (Copper Leaf Hotel), தாமீரா அரங்கில் நடைபெறவுள்ளது.
January 7, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களை, புதிதாக ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்டக்கழக செயலாளராக பொறுப்பேற்ற திரு.K.P. நல்லசாமி அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்