August 1, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: மன்னர் தீரன் சின்னமலை நினைவு தினம்! கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் சென்னையில் மரியாதை செலுத்துகிறார்கள்.
July 21, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சட்டமன்றத் தொகுதி வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் 25-07-2025 சிவகங்கை (ராஜ் மஹால்), 26-07-2025 திருமங்கலம்(GKM பேலஸ்), 28-07-2025 நாங்குநேரி(சுப்புலட்சுமி திருமண மஹால்), 30-07-2025 ஸ்ரீரங்கம் (AG திருமண மஹால்) நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டங்களில் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளைச் சார்ந்த அனைத்து நிலையிலான கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தலைமைக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
July 18, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 தலைமைக் கழக அறிவிப்பு: கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவாரூர் மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர் திரு.P.G.பாரதி அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத்தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
July 12, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: கர்மவீரர் காமராஜர் அவர்களின் 123வது பிறந்தநாள் விழா! -சென்னையில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மரியாதை செலுத்துகிறார்கள். – எளிய தொண்டனாக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மாபெரும் தலைவராக உயர்ந்தவரும், கல்வி, விவசாயம், சுகாதாரம் மற்றும் தொழில்துறையில் புரட்சியை ஏற்படுத்தி, தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாகத் திகழச்செய்த மாமனிதருமான தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 123 வது பிறந்தநாள் விழா வருகின்ற 15.07.2025 செவ்வாய்க்கிழமையன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் அன்றைய தினம் காலை 10 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள கர்மவீரர் காமராஜர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். இந்நிகழ்வில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், பகுதி, வட்டக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மற்றும் சார்பு அணிகளின் மாநில, மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் என அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். – தலைமைக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
July 11, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக செய்தி வெளியீடு: வீரர் அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்த நாள் – கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
July 5, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருச்சி தெற்கு மாவட்டம், மணப்பாறை சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த கழக செயல்வீரர்கள் – செயல்வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் வருகிற 08.07.2025, காலை 10 மணியளவில் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அமைந்துள்ள RV திருமண மஹாலில் நடைபெறுகிறது.
July 1, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்: ஒருங்கிணைந்த ஈரோடு புறநகர் கிழக்கு மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட செயல்வீரர்கள் – செயல்வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் வருகின்ற 05.07.2025, சனிக்கிழமையன்று காலை 10 மணியளவில், ஈரோடு மாவட்டம், பவானி காடையாம்பட்டியில் அமைந்துள்ள கொங்கு மஹாலில் நடைபெறவுள்ளது.
June 21, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்: சேலம் மத்திய மாவட்டம், வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த கழக செயல்வீரர்கள்- செயல்வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் வரும் 24.06.2025 காலை 10 மணியளவில் சேலம் மாவட்டம், அரியானூரில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதித்யா மஹாலில் நடைபெறவுள்ளது.
June 21, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்: தருமபுரி மாவட்டத்திற்குட்பட்ட கழக செயல்வீரர்கள் – செயல்வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் வரும் 25.06.2025 காலை 10 மணியளவில், தருமபுரியில் அமைந்துள்ள வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
June 18, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 தலைமைக் கழக அறிவிப்பு: நீக்கம் : நாகப்பட்டினம் மாவட்டக் கழக செயலாளர் பொறுப்பிலிருக்கும் திருமதி.RCM.மஞ்சுளா சந்திரமோகன் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.