February 24, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 “தமிழக மக்களின் மகிழ்ச்சி தான் எனது லட்சியம்; தமிழக மக்களின் வளர்ச்சியும், வளமான வாழ்வும் தான் நான் காண விரும்பும் இலக்குகள்” எனக்கூறி, தமிழக மக்களின் வளர்ச்சியையே லட்சியமாக கொண்டு இந்தியாவுக்கே முன்மாதிரியான சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி “மக்களால் நான்; மக்களுக்காகவே நான்” என தன் இறுதி மூச்சு வரை மக்களுக்காக வாழ்ந்து மறைந்த இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள், மதுரை, ஹோட்டல் ஹெரிட்டேஜ் வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இதயதெய்வம் அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதன் தொடர்ச்சியாக, கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், சென்னை ராயப்பேட்டை, தலைமைக் கழக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். மேலும், கழக அமைப்பு ரீதியாக செயல்படும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கழக நிர்வாகிகள் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்கள்.
February 8, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்றத்தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கள்-வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம்; கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்கிறார்கள்!
February 3, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக செய்தி வெளியீடு: பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு தினம்! – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள், இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் மரியாதை! ; கழக அமைப்பு ரீதியாக செயல்படும் அனைத்து மாவட்டங்களிலும் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள்.
February 2, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு : தி.மு.க அரசின் சட்டம், ஒழுங்கு சீர்கேடு மற்றும் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டங்கள்! கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்று கண்டனப் பேருரையாற்றுகிறார்கள்!
January 24, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 சட்டமன்றத்தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கள்-வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டங்களின் தொடர்ச்சி! (இராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய வருவாய் மாவடடங்கள்) கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்கிறார்!
January 20, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தாய்மொழியாம் தமிழ் மொழியை காத்திடவும் இந்தியாவின் பன்முகத்தன்மை ஆட்சிக்கு சவாலாக இருந்த இந்தித் திணிப்பை எதிர்த்திடவும் நடைபெற்ற மொழிப்போரில் பங்கேற்று தங்களின் உயிரை துறந்து தமிழ்மொழியை காத்திட்ட மொழிப்போர் தியாகிகளுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வருகின்ற 25.01.2024 (வியாழன்கிழமை) தமிழகம் முழுவதும் வீரவணக்கம் செலுத்திடுவோம். கழகப் பொதுச்செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் பொதுக்கூட்டமும், மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்திடுவதற்கான ஏற்பாடுகளையும் மாவட்ட கழக செயலாளர்களுடன், மாணவர் அணி மற்றும் மாணவியர் அணி நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சிகளில், அந்தந்த வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, ஊராட்சி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் என அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் அன்னைத் தமிழ்மொழியைக் காத்து நின்றிடவும், நம் தாய்மொழிக்கு கிடைக்க வேண்டிய பெருமைகள் அனைத்தையும் பெற்றுத்தந்திடவும், காலத்திற்கேற்ற வகையில் தமிழின் வளர்ச்சியை ஊக்குவித்திடவும் பாடுபட மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாளில் உறுதியேற்றிடுவோம்.
January 17, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் ஏழைகளின் ஏந்தல், பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 107வது பிறந்தநாளான இன்று கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள், கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம், மணிகுண்டு அருகே அமைந்துள்ள புரட்சித்தலைவரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள்.
January 11, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக செய்தி வெளியீடு: தியாகி திருப்பூர் குமரன் அவர்களின் நினைவு நாள்! – கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
January 10, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: பொன்மனச்செம்மல் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாள்! -தமிழகமெங்கும் தெருமுனைப் பிரச்சாரக்கூட்டங்கள்; கடலூரில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மரியாதை செலுத்துகிறார்கள்.
January 3, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக செய்தி வெளியீடு: ராணி வேலு நாச்சியார் அவர்களின் பிறந்தநாள்! – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.