January 15, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தென் தமிழகத்தின் வாழ்வாதாரமாக திகழும் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் பிறந்தநாள் இன்று. தலைமுறைகளை தாண்டி கொண்டாடப்படும் அந்த மாமனிதர், கட்டிய அணை இன்றும் லட்சோபலட்ச குடும்பங்களை வாழ்வித்துக் கொண்டிருக்கிறது. இந்த அணைக்காக தன் குடும்பத்தின் சொத்து சுகங்களை இழந்த கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் தியாகம் இனம், மதம், மொழி, நாடு எல்லைகளை தாண்டி மனித நேயத்தின் அடையாளச் சின்னமாக வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.
January 13, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழர்களின் தனிப்பெரும் விழாவாம் பொங்கல் திருநாளைக்கொண்டாடி மகிழும் தமிழ் உறவுகள் அனைவருக்கும் மனமுவந்தவாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
January 12, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள கண்ணங்கோட்டையில் இரட்டைக் கொலையுடன் கொள்ளை சம்பவம் நிகழ்ந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. திருமணத்திற்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த நகைகள், வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன. இதற்காக பெண்கள் இரண்டு பேர் கொல்லப்பட்டிருப்பது தமிழ்நாட்டில் கொள்ளையர்களுக்கு தி.மு.க. ஆட்சியில் எந்த அளவிற்கு துணிச்சல் வந்திருக்கிறது என்பதும் தமிழ்நாட்டின் இன்றைய சட்டம்-ஒழுங்கின் நிலைக்கு ஒர் எடுத்துக்காட்டு. இந்த கொலை, கொள்ளைக்கு காரணமானவர்கள் உடனடியாக கைது செய்யப்படவேண்டும். பாதிக்கப்பட்ட கண்ணங்கோட்டை திரு.செல்லையா குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைக்கவேண்டும்.
January 12, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மனிதநேயத்தையும், தன்னம்பிக்கை கொண்டு வாழ்வை எதிர்கொள்ளும் முறையையும் மக்களுக்கு எடுத்துரைத்த சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்தநாள் இன்று!“உற்காசமாக இருப்பதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி” என அவர் அறிவுறுத்திய வழியிலேயே, மக்கள் அனைவரிடத்திலும் அன்பு காட்டி, அவர்களை மகிழ்ச்சியாக வாழவைத்திடவும், இளைஞர் சமுதாயத்திடம் தன்னம்பிக்கையை விதைத்திடவும் இந்நாளில் உறுதியேற்போம்.
January 9, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஆளுநர் உரையின்போது தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிகழ்ந்திருக்கும் சம்பவங்கள் துரதிஷ்டவசமானவை. தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் ஒரு கரும்புள்ளியாகிவிட்டது.