January 29, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கடந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து மே 24ஆம் நாள் பாசனத்திற்காக நீர் திறந்தபொழுதும், மழை வெள்ள பாதிப்புகளால் சம்பா சாகுபடி ஒரு மாத காலம் தாமதமாக தொடங்கியதால் பயிர்கள் இன்னும் அறுவடைக்கு தயார் நிலையை எட்டவில்லை. இந்நிலையில் வழக்கமான நிகழ்வாக ஜனவரி 28ஆம் தேதியே தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டிருப்பது, டெல்டா விவசாயிகளை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. சம்பா சாகுபடி நிறைவடையாத நிலையில், சுமார் 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாதிப்புக்குள்ளாகும் என்பதால், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று மேலும் 15 நாட்களுக்கு தண்ணீரைத் திறக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
January 27, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கழக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் ஒத்திவைப்பு
January 27, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஈரோடு (கிழக்கு)-98 சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் அறிவிப்பு !
January 27, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஈரோடு கிழக்கு(98) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் அறிவிப்பு!
January 26, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நாட்டின் உயரிய பத்ம விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பாடகி திருமதி.வாணி ஜெயராம், திரு.கல்யாணசுந்தரம் பிள்ளை, திரு.வடிவேல் கோபால், திரு.மாசி சடையன், திரு.பாலம் கல்யாண சுந்தரம், டாக்டர்.கோபாலஸ்வாமி வேலுசாமி மற்றும் புதுச்சேரியை சேர்ந்த டாக்டர். நளினி பார்த்தசாரதி ஆகியோரை பாராட்டி மகிழ்கிறேன். அவரவர் துறைகளில் இன்னும் பல சாதனைகளைப் புரிந்து நம்முடைய தேசத்திற்கு பெருமை தேடித்தர வாழ்த்துகிறேன்.
January 25, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது.
January 25, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அன்னை தமிழ்மொழியைக் காத்திட தங்கள் இன்னுயிரை ஈந்த மொழிப்போர் தியாகிகளைப் போற்றிடும் வீரவணக்க நாளில் அவர்களை தாய்மொழிப்பற்றோடு நினைவு கூர்ந்து வணங்கிடுவோம். ‘மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம்’ என்பதை மறவாமல், அன்னைத் தமிழ் மொழியைக் காத்திட இந்நாளில் உறுதி ஏற்போம்.
January 23, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 “இன்னொரு பிறவி எடுத்தால் அதில் தமிழனாக பிறக்க வேண்டும்” என்று சொல்லி தமிழர்களையும், தமிழ்நாட்டையும் உள்ளார்ந்து நேசித்த வீரத்திருமகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த நாள் இன்று! தாய்நாட்டின் மீது கொண்ட நேசத்திற்காக எண்ணற்ற தியாகங்களைப் புரிந்து, இந்திய மக்களின் மனங்களில் நிறைந்திருக்கும் மாவீரர் நேதாஜியின் தீரத்தையும் தியாகங்களையும் வணங்கிடுவோம்.
January 19, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திரைப்பட நடிகர் வடிவேலு அவர்களின் தாயார் திருமதி.சரோஜினி மறைந்தார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். தாயை இழந்துவாடும் திரு.வடிவேலு அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
January 17, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106வது பிறந்த நாள் விழா. விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகம் எதிரில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.