சமீபத்திய செய்தி

பொதுச்செயலாளர் அறிக்கைகள்


தேதி / நாள் பொதுச்செயலாளர் அறிக்கைகள் விவரங்கள் பதிவிறக்கம் செய்ய
06/12/2022 உலக நாடுகள் போற்றக்கூடிய சட்டத்திட்டங்களை நமக்கு வகுத்து தந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக வாழ்நாளெல்லாம் பாடுபட்ட சட்டமேதை டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் அரும்பணிகளை நினைவுகூர்ந்து போற்றிடுவோம்.- கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன். Click Here for More Details
05/12/2022 ஒவ்வொரு கணமும் எங்களை வழி நடத்திக்கொண்டிருக்கும் இதயதெய்வம் அம்மா அவர்களுக்கு கழகத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தினோம். Click Here for More Details
03/12/2022 கடவுளின் குழந்தைகளான மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்! - கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன். Click Here for More Details
02/12/2022 நியூசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியின் வலுதூக்கும் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ள செல்வி.லோகப்பிரியாவை மனதாரப் பாராட்டுகிறேன். - கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் Click Here for More Details
29/11/2022 ஏழை, எளிய மக்களின் பசி தீர்ப்பதற்காக இதயதெய்வம் அம்மா அவர்கள் கொண்டுவந்த, அம்மா உணவகங்களை மூடுவதற்கான ஏற்பாடுகளை தி.மு.க அரசு தொடர்ந்து செய்துவருவது கண்டனத்திற்குரியது. அம்மா உணவகங்களால் நஷ்டம் ஏற்படுவதாக சென்னை மாநகராட்சி கணக்கு நிலைக்குழு அறிக்கை கொடுத்திருப்பதும் அதன் ஓர் அங்கம்தான். அம்மா உணவகங்களை தொடர்ந்து நடத்துவோம் என்று மேயர் சொன்னாலும் அந்த உணவகங்களை எப்படி அவர்கள் சீரழித்து வருகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஏழை மக்கள் பசியாறுவதைத் தடுக்க நினைத்தால் மக்கள் அதற்கான பாடத்தை தி.மு.க.விற்கு புகட்டுவார்கள். Click Here for More Details
26/11/2022 திருவாரூர் மாவட்டத்தில் அ.ம.மு.க.வைச் சேர்ந்தவர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்களாக உள்ள ஊர்களில் அடிப்படையான திட்டங்களைக்கூட செயல்படுத்தவிடாமல் தடுக்கும் தி.மு.க அரசுக்கு கடும் கண்டனம்.-கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் Click Here for More Details
25/11/2022 இதயதெய்வம் அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களுக்கு அறிஞர் அண்ணாவின் பொன்மொழியை நினைவுபடுத்துகிறேன். தரம் தாழ்ந்த தனிப்பட்ட விமர்சனங்களைக் கையாள்வது எப்படி ? Click Here for More Details
22/11/2022 முதுபெரும் தமிழறிஞர் பத்மஸ்ரீ முனைவர் ஒளவை நடராசன் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் நன்மதிப்பைப் பெற்றிருந்த திரு.நடராசன் அவர்கள், ஆற்றிய தமிழ்ப் பணிகள் என்றும் நிலைத்திருக்கும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். Click Here for More Details
18/11/2022 தேசத்தின் மானம் காக்க ஆங்கிலேயருக்கு எதிராக கப்பலோட்டி, தன் சொத்து சுகங்களை இழந்து, சிறையில் வாடிய செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவு நாள் இன்று! அந்த வீரத்திருமகனின் தியாகத்தை, தேச பக்தியை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம். Click Here for More Details
16/11/2022 ஜனநாயகம் ஆரோக்கியமாக இருப்பதில் முக்கியப் பங்காற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கு தேசிய பத்திரிகையாளர் தினத்தில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மற்ற துறையில் இருப்பவர்களைப் போலவே ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களின் நலன்களைப் பேணிப் பாதுகாத்திடுவது அவசியமாகும். அதற்கு வழிகாட்டும் வகையில் தேசிய பத்திரிகையாளர் தினம் அமையட்டும். Click Here for More Details
15/11/2022 விளையாட்டுத்துறையில் வழங்கப்படும், நாட்டின் மிக உயர்ந்த விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுபெறும் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் அவர்களுக்கும், அர்ஜூனா விருதுபெறும் சதுரங்க விளையாட்டு வீரர் செல்வன்.பிரக்ஞானந்தா அவர்களுக்கும், இளம் துப்பாக்கிச் சுடும் வீராங்கனை செல்வி.இளவேனில் வாலறிவன் அவர்களுக்கும் எனது மனப்பூர்வமான பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்திற்கு பெருமை தேடித்தரும் இவர்கள் மூவரும் தத்தமது துறைகளில் புதிய சாதனைகளைப் புரிய வாழ்த்துகிறேன். Click Here for More Details
15/11/2022 அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் இளம் கால்பந்து வீராங்கனை செல்வி.பிரியா மரணமடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுகுறித்து உரிய விசாரணை நடத்துவதோடு உயிரிழந்த வீராங்கனையின் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இத்தகைய மன்னிக்க முடியாத தவறுகள் எதிர்காலத்தில் நிகழாதவாறு தடுப்பதற்குரிய நடவடிக்கைகளையும் அரசு எடுத்திட வேண்டும். Click Here for More Details
14/11/2022 நம்பிக்கை நட்சத்திரங்களாம் குழந்தைச் செல்வங்களுக்கு இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்! “குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்...” என்ற மொழிக்கேற்ப குழந்தைகளை எல்லா நாளும் கொண்டாடி மகிழ்வோம். சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைத் தாண்டி எல்லாக் குழந்தைகளும் சமவாய்ப்புகளோடு வளர்வதற்கும், அதன்வழியாக நாட்டின் எதிர்காலத்தைச் சிறப்பாக உருவாக்குவதற்கும் உழைத்திட குழந்தைகள் நாளில் உறுதியேற்றிடுவோம். Click Here for More Details
11/11/2022 பேரறிவாளனைத் தொடர்ந்து எஞ்சிய 6 தமிழர்களின் நீண்ட சட்டப்போராட்டம் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்திருக்கிறது. சிறையிலிருந்து வெளிவரவிருக்கும் அவர்கள் புதியதோர் வாழ்வைத் தொடங்க வாழ்த்துகள். Click Here for More Details
10/11/2022 எல்லைப் பகுதியில் சட்டவிரோதமாக மின்னணு மறுஅளவை(Digital Re-Survey) செய்து, தமிழகத்திற்குச் சொந்தமான கிராமங்களை முழுவதுமாக தமது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு கேரள அரசு முயற்சித்து வருவதாக வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. கேரளாவின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது இருமாநில எல்லை பகுதியில் சுமார் 600 கிலோ மீட்டர் தூரத்திற்கு கூட்டு சர்வே செய்வதற்கு அப்போது தமிழகத்துடன் ஒத்துழைக்காத கேரளா, இப்போது தமிழகத்தின் அனுமதியின்றியே இந்த அளவீட்டு பணியை மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது. எல்லைப் பகுதிகளில் உள்ள தமிழகத்திற்குச் சொந்தமான பல இடங்களை ஏற்கனவே படிப்படியாக ஆக்கிரமித்து வைத்திருக்கும் கேரளா, தற்போது முழுமையாக அவற்றைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனால், கடந்த 1ஆம்தேதி முதல் நடைபெறும் இந்த அத்துமீறலை தடுத்து நிறுத்தாமல் தி.மு.க அரசு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே தமிழக உரிமைகள் பறிபோவது வாடிக்கை. இந்த முறை தமிழகத்தின் நிலங்களும் பறிபோய்விடுமோ? ஸ்டாலின் அரசு விழித்துக்கொள்ளுமா? இல்லை தமது கூட்டணி கட்சி ஆட்சி நடத்தும் கேரளாவிற்காக தமிழக நிலப்பகுதியை தூங்குவது போல நடித்து விட்டுக்கொடுக்கப்போகிறார்களா? Click Here for More Details
09/11/2022 வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் புதிய வாக்காளர் சேர்ப்புப் பணிகளில் கழகத்தினர் முழுமையாக ஈடுபடவேண்டும்: கழக உடன்பிறப்புகளுக்கு அன்பு வேண்டுகோள்! Click Here for More Details
08/11/2022 தமிழக அரசுப் பணிகளில் உள்ள லட்சக்கணக்கான காலியிடங்களை நிரப்பும் வேலையை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்துடன் தி.மு.க அரசு அரசாணை வெளியிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அரசு வேலைக்காக முயற்சித்துவரும் இளைஞர்களின் கனவில் மண் அள்ளிப்போடும் விதமாக தி.மு.க அரசு செயல்படுவதை ஏற்க முடியாது. அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவது மட்டுமின்றி, பணியிலுள்ள அரசு அலுவலர்களின் செயல்பாடுகளை மதிப்பிடுவதையும் தனியார்மயமாக்க தி.மு.க அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அரசு எந்திரத்தின் மூளையாக செயல்படும் அரசு ஊழியர்களை புதிதாக நியமிப்பதையும் ஏற்கனவே இருப்பவர்களை கட்டுப்படுத்துவதையும் தனியாரிடம் ஒப்படைத்துவிட்டால், ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் தனியார் வசம் போய்விடாதா? சற்றேறக்குறைய இது தமிழ்நாட்டையே தனியாருக்கு விற்பதற்குச் சமமாகும். புரட்சித்தலைவரால் தீய சக்தி என அடையாளம் காட்டப்பட்ட தி.மு.க.வின் போலி திராவிட மாடல் அதைத்தான் செய்ய விரும்புகிறதா? தமிழ்நாட்டு இளைஞர்களின் அரசு வேலை கனவைக் குழி தோண்டி புதைக்கும் தி.மு.க அரசின் அரசாணை எண் 115-ஐ உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அப்படி செய்யாவிட்டால், அரசு ஊழியர்கள், இளைஞர் சக்தி மற்றும் பொதுமக்களோடு இணைந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன். Click Here for More Details
07/11/2022 பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது.பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களின் மேம்பாட்டிற்கு அரசு உதவிட வேண்டுமென்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதற்காக சமூகநீதியின் அடிப்படையையே சீர்குலைப்பதுபோல நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா பின்தங்கிய சமூகங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.உச்சநீதிமன்ற தீர்ப்பில்10%இடஒதுக்கீட்டுக்கு எதிராக இரண்டு நீதிபதிகள் பட்டியலிட்டிருக்கும் காரணங்களை பார்த்தாலே இதனை புரிந்துகொள்ளலாம். மேலும், தமிழகத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கொண்டுவரப்பட்டு, அரசியல் சாசன பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கும் 69% இட ஒதுக்கீட்டிற்கு பாதிப்பு வராது என்ற வகையில் தீர்ப்பு அமைந்திருப்பது ஆறுதல் தருகிறது. அதேநேரத்தில், இந்த 10% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டால் அதிலும் சிக்கல் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே, தமிழக அரசு இதில் உறுதியாக நின்று, அம்மா அவர்கள் கொண்டுவந்த 69% இடஒதுக்கீட்டைக் காப்பாற்றிட வேண்டும். ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் முறையான புள்ளிவிவரங்கள் இல்லாமல், அரசியல் காரணங்களுக்காக இத்தகைய இடஒதுக்கீடுகள் வழங்கப்படுவது நிறுத்தப்படவேண்டும். அதற்குப் பதிலாக, சாதிவாரி கணக்கெடுப்பை முழுமையாக நடத்தி, அதற்கேற்ப இடஒதுக்கீட்டை வழங்குவதுதான் உண்மையான சமூக நீதியாகும். Click Here for More Details
04/11/2022 ஆவின் ஆரஞ்சு பால் விலையை தி.மு.க அரசு திடீரென உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 சேர்த்து கொடுப்பதாகக் கூறிவிட்டு, விற்பனை விலையில் லிட்டருக்கு ரூ.12 அதிகப்படுத்தியிருக்கிறார்கள். மற்ற ஆவின் பால் வகைகளின் விலையையும் அடுத்தடுத்து உயர்த்த மக்கள் விரோத தி.மு.க அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. உயர்த்தப்பட்ட ஆரஞ்சு பால் விலையைக் குறைப்பதுடன், மற்ற பால் விலையையும் உயர்த்தக்கூடாது என தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன். Click Here for More Details
01/11/2022 சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள 150-க்கும் மேற்பட்ட இடங்களில், அவற்றை அகற்றுவதற்கு உடனடியாக உரிய நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும். மழை தொடர்ந்து பெய்து வருவதால் தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்களில் அசம்பாவிதங்களைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்திட வேண்டும். சென்னை தவிர தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்கள் உட்பட கனமழை பெய்துவரும் இடங்களில் மக்களுக்குத் தேவையான மீட்பு மற்றும் உதவி பணிகளை விரைந்து செயல்படுத்திட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுக்களை தமிழக அரசு தாமதமின்றி அமைத்திட வேண்டும். நீர்நிலைகளையும் வடிகால்களையும் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும் எனவும் அரசைக் கேட்டுக்கொள்கிறேன். Click Here for More Details
30/10/2022 பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் நினைவாலயத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மரியாதை செலுத்தினார்கள். Click Here for More Details
28/10/2022 மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிற்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் மதுரை தெப்பக்குளத்தைச் சேர்ந்த திரு.சச்சின் சிவா (எ) C.சிவக்குமார் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இளம் வயதிலேயே போலியோ நோயால் பாதிக்கப்பட்டாலும் தனது கடின உழைப்பாலும், இடைவிடாத முயற்சியாலும் இந்த உயரத்தை எட்டிப் பிடித்திருக்கும் சிவா, இன்றைய இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார். கிரிக்கெட்டில் புதிய சாதனைகளைப் புரிந்து தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் அவர் பெருமை தேடித்தர வேண்டுகிறேன். Click Here for More Details
26/10/2022 பிரிட்டன் பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திரு.ரிஷி சுனக் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு காலத்தில் உலகைக் கட்டி ஆண்ட நாடு, தற்போது நெருக்கடியைச் சந்திக்கும் நேரத்தில் அதன் பிரதமராகி இருக்கும் திரு.ரிஷி சாதனைகள் புரிந்து நம் அனைவருக்கும் பெருமை தேடித்தரட்டும். Click Here for More Details
24/10/2022 மறத்தமிழ் வீரத்திற்கும் மறக்க முடியாத தியாகத்திற்கும் அடையாளமாகத் திகழும் மாமன்னர்கள் மருது சகோதரர்களின் குருபூஜை நாளில் அவர்களை வணங்குகிறேன். தாய்நாட்டையும் தமிழ் மக்களையும் உளமாற நேசித்து மருதுபாண்டியர் காட்டிய வழியில் பயணிப்போம்! Click Here for More Details
24/10/2022 புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணிபுரிந்துவந்த திரு. முத்துக்கிருஷ்ணன் அவர்கள், சென்னை மழைநீர் வடிகால் பணிகளுக்காக வெட்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து, அதன் தொடர்ச்சியாக மரணத்தை தழுவியிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ஊடக நண்பர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். சென்னை மாநகரில் மிகுந்த தொய்வோடு நடந்துவரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைவுபடுத்தவும், பணிகள் முடியும்வரை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யும்படியும் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தும் தமிழக அரசு காட்டிய அலட்சியத்தால் இன்று முத்துக்கிருஷ்ணனை இழந்திருக்கிறோம். இனிமேலும் உயிர்ப்பலிகள் ஏற்படாத அளவுக்கு இனியாவது தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அத்துடன் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் கேட்டுக்கொள்கிறேன். மறைந்த செய்தியாளர் திரு. முத்துக்கிருஷ்ணனுக்கு தமிழக அரசு வழங்கியுள்ள ஐந்து லட்சம் ரூபாய் நிதி உதவி போதாது. அவரது வயது, குடும்ப சூழல் இவற்றை கருத்தில்கொண்டு, ஒரு தனி நேர்வாக இச்சம்பவத்தைக் கருதி, குறைந்தது ஐம்பது லட்சம் ரூபாயை அந்தக் குடும்பத்திற்கு நிவாரணமாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். Click Here for More Details
24/10/2022 கோவை கார் சிலிண்டர் விபத்து குறித்து புதுப்புது தகவல் வெளியாகி வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பண்டிகை நேரத்தில் மக்களை பதற்றத்திற்கு ஆளாக்கும் வகையில் நிகழும் இத்தகைய சம்பவங்கள் கவலை அளிக்கின்றன. திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே இது வெளிக்காட்டுகிறது. சட்டம் - ஒழுங்கை பராமரிப்பதும், மக்களிடம் உள்ள பயத்தை தணிப்பதுமே காவல்துறையின் முக்கியமான பணியாக இருக்கவேண்டும். இனி, தமிழ்நாட்டின் எந்த இடத்திலும் இத்தகைய சம்பவங்கள் நடக்காதபடி உளவுத்துறை கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். Click Here for More Details
23/10/2022 தீபாவளி திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும், இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ! Click Here for More Details
20/10/2022 பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு பெறுவதில் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளின் பெயர் விடுபட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசு உடனடியாக இப்பிரச்னையைக் கவனித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும். ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்தே வேளாண் பயிர்க்காப்பீட்டில் அலட்சியம் காட்டி வரும் தி.மு.க அரசு, இதிலும் கோட்டை விட்டுவிடக்கூடாது. Click Here for More Details
16/10/2022 தமிழ்ப் பத்திரிகை உலகில் குறிப்பிடத்தக்க ஆளுமையான 'மாலை முரசு' அதிபர் பா.ராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் நினைவு நாள் இன்று! பத்திரிகை நடத்துவது என்பது வெறும் தொழில் மட்டுமல்ல என்ற உணர்வோடு, தமிழர் நலனில் மிகுந்த அக்கறையோடு ஆற்றிய பணிகளைப் போற்றிடுவோம்! Click Here for More Details
11/10/2022 போக்குவரத்துக்‌ கழகம்‌, மின்சார வாரியம்‌, தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழகம்‌ உள்ளிட்ட தமிழக அரசின்‌ சார்பு நிறுவனங்களில்‌ பணியாற்றும்‌ தீபாவளி போனஸ்‌ உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும்‌. Click Here for More Details
05/10/2022 அண்ணல் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை மிலாது நபியாகக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்! Click Here for More Details
03/10/2022 செய்யும் தொழிலைப் போற்றி வணங்கும் ஆயுத பூஜையையும், வெற்றித்திருநாளான விஜயதசமியையும் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்! Click Here for More Details
16/09/2022 "இந்திய விடுதலைக்காக பாடுபட்டவரும், மிகப்பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உழைத்தவருமான திரு. எஸ். எஸ். ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாள் இன்று! தமிழக அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து அவர் ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்து போற்றிடுவோம்!" Click Here for More Details
15/09/2022 பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில் கழகத்தின் தொழிற்சங்க அமைப்பான இதயதெய்வம் அம்மா தொழிற்சங்க பேரவையின் கொடி, தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில் இன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. Click Here for More Details
07/09/2022 பொன் ஓணம் திருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், மன நிறைவையும் கொண்டு வந்து சேர்க்கிற திருநாளாக அமைய வாழ்த்துகள்! Click Here for More Details
05/09/2022 அறப்பணியாம் ஆசிரியர் பணியில் தங்களை அர்ப்பணித்துக்கொண்டுள்ள ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்! Click Here for More Details