சமீபத்திய செய்தி

தலைமைக் கழக அறிவிப்புகள்


தேதி / நாள் தலைமைக்‌ கழக அறிவிப்புகள் விவரங்கள் பதிவிறக்கம் செய்ய
05/12/2022 புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தில், கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் கழக நிர்வாகிகள், மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, அம்மாவின் கம்பீரமான நல்லாட்சியை அமைத்திட அம்மா அவர்களின் நினைவிடத்தில் கழகத்தினர் உறுதியேற்றனர். Click Here for More Details
29/11/2022 கழக சார்பு அணிகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. - கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்கிறார் | 30.11.2022 - இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறை | 06.12.2022 - சிறுபான்மையினர் நலப்பிரிவு | 07.12.2022 - தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு மற்றும் தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு | 08.12.2022 - வழக்கறிஞர் பிரிவு Click Here for More Details
27/11/2022 புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு நாள்: கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மெரினா கடற்கரை அம்மா நினைவிடத்தில் டிசம்பர் 5ம் தேதி அஞ்சலி செலுத்துகிறார்கள். Click Here for More Details
22/11/2022 கழக சார்பு அணிகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்: சென்னை தலைமைக் கழக அலுவலகத்தில் நவம்பர் 27ம் தேதி தொடங்குகிறது! கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்கிறார். Click Here for More Details
18/11/2022 செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவு நாள் : கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் பகுதி டவுன் பொருட்காட்சி திடலில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். Click Here for More Details
03/11/2022 மாமன்னர் இராஜராஜ சோழன் அவர்களின் 1037வது சதய விழா : கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், தஞ்சாவூர் மாவட்டம், பெருவுடையார் கோவில் அருகில் அமைந்துள்ள இராஜராஜ சோழரின் திருவுருவச்சிலைக்கு, கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். Click Here for More Details
30/10/2022 தென்னாட்டு போஸ் என அழைக்கப்படுபவரும் இந்திய விடுதலைக்கு போராடியவருமான பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையை முன்னிட்டு கழக பொதுச்செயலாளர் தலைமையில் பசும்பொன்னில் அன்னாரது நினைவாலயத்தில் மரியாதையை செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை மற்றும் திருச்சியில் கழக நிர்வாகிகள் தேவர் திருமகனாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். Click Here for More Details
27/10/2022 தேவர் திருமகனார் குரு பூஜை விழா : வரும் அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன்னில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மரியாதை செலுத்துகிறார்கள் ! Click Here for More Details
27/10/2022 மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் குருபூஜை விழா - கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் அமைந்துள்ள மருதுசகோதரர்கள் நினைவிடத்தில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். Click Here for More Details
18/10/2022 மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் குரு பூஜை விழா : கழக பொதுச்செயலாளர் அவர்கள் அக்டோபர் 24 அன்று திருப்பத்தூரில் பங்கேற்கிறார்கள்! Click Here for More Details
15/10/2022 மக்களின் குடியரசுத்தலைவராகத்” திகழ்ந்த, டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் : கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், இராமேஸ்வரம் பேக்கரும்பு கிராமத்தில் அமைந்துள்ள நினைவு மண்டபத்தில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். Click Here for More Details
04/10/2022 தியாகி திருப்பூர் குமரன் அவர்களின் பிறந்த நாள் : கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், திருப்பூர் இரயில் நிலையம் அருகில் உள்ள கொடி காத்த குமரன் அவர்களின் மணிமண்டபத்தில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். Click Here for More Details
02/10/2022 அனைத்துத் துறைகளிலும் முறைகேடு - மின் கட்டண உயர்வு - தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமை : தி.மு.க அரசின் மக்கள் விரோதப் போக்கினைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அக்டோபர் 12ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டங்கள்! சென்னையில் கழக பொதுச்செயலாளர் பங்கேற்கிறார்! Click Here for More Details
02/10/2022 தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள் - கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு நாள் : கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், சென்னை கிண்டி காந்தி மண்டபம் வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கும், பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவப்படத்திற்கும் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். Click Here for More Details
27/09/2022 தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி.பா.ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாள் விழா : கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், சென்னை எழும்பூரில் உள்ள அன்னாரது திருஉருவச்சிலைக்கு கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். Click Here for More Details
24/09/2022 “தினத்தந்தி” அதிபர் பத்மஸ்ரீ பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாள் : கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், போயஸ் தோட்டத்தில் உள்ள திரு.பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். Click Here for More Details
18/09/2022 சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்காக உழைத்த திரு.ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாள் : கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், சென்னை, கிண்டி காந்தி மண்டபத்திலுள்ள அன்னாரது மணிமண்டபத்தில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். Click Here for More Details
16/09/2022 தந்தை பெரியார் அவர்களின் 144வது பிறந்தநாள் விழா : தஞ்சையில் கழக பொதுச்செயலாளர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்! Click Here for More Details
11/09/2022 சமூகத் தீமையான தீண்டாமையை அகற்றுவதற்கு பாடுபட்ட திரு.இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவுநாள் : கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். Click Here for More Details
07/09/2022 தமிழகம் முழுவதும் கழகத்தின் சார்பில் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள்: திருப்பூரில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்கிறார்கள்! Click Here for More Details
06/09/2022 தென்தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்விக்காக பாடுபட்ட திரு.பி.கே.மூக்கையா தேவர் அவர்களின் நினைவு தினம் : கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, பசும்பொன் முத்துராலிங்கதேவர் கல்லூரியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவிடத்தில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். Click Here for More Details
05/09/2022 கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாள் : கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். Click Here for More Details
01/09/2022 மாமன்னர் பூலித்தேவரின் ஜெயந்தி விழா : கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், தென்காசி மாவட்டம், நெல்கட்டான் செவல் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் திருவுருவச் சிலைக்கு கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். Click Here for More Details